பக்கம்:மறைமலையம் 29.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

18. புராண இதிகாசக் கருத்து

இனி, ஆரியவேதங்களின் புன்மையும் அவற்றின்கட் சொல்லப்பட்ட இந்திரன் முதலான சிறுதெய்வ வழிபாட்டின் சிறுமையும், அவரைக் கொண்டாடும் வெறியாட்டு வேள்வி களின் தீவினையும் எடுத்துக்காட்டி, முழு முதற் கடவுள் சிவம் ஒன்றேயாதலும் அதனை உள்ளவாறு உணரும் மெய்யுணர்வின் மாட்சியும் அதனை எய்துதற்குரிய மெய்யறிவின் சிறப்புந் தேற்றித் தமிழ்ச்சான்றோர்கள் ஈசகேனம் முதலான பழைய உபநிடதங்களையுஞ் சாங்கியம் முதலான தரிசனங்களையும் இயற்றியும், ஆரியர் அவற்றானும் அறிவு திருந்தாராய்த் தமக்குரிய வெறியாட்டு வேள்விகளைப் பெருக்கிச் செய்தற்குந், தமிழர் அறிவுறுத்திய முதற் கடவுள் வழிபாட்டை மறுத்தற்குமாக ‘மீமாஞ்சை' நூல் இயற்றிவிட்டார். அவர் செய்த அம் மீமாஞ்சை நூல் உணர்ச்சியும் அன் வழியே வெறியாட்டு வேள்விகளும் பின்னும் பெருகவே, ஆரியர்க்குந் தமிழர்க்கும் பெரும் போர் மூண்டது. இங்ஙனம் மூண்ட பெரும்போரின் வரலாறுகளே பின்னர்ப் புராணங்களிலும் இதிகாசங்களினும் எழுதி வைக்கப்பட்டன. இவற்றின்கட் சொல்லப்பட்ட தாருகாவனத்து இருடிகளின் வேள்விகளுந், தக்கன் முதலாயினோர் சிவபிரானை இகழ்ந்து செய்ப வேள்விகளும் எல்லாம் ஆரியராற் செய்யப்பட்ட வெறியாட்டு நாத்திக வேள்விகளேயாம்; அவ்வேள்விகளை அழித்து அவற்றைப் புரிந்த ஆரியரை ஒறுத்து அவர்தஞ் செருக்கை அடக்கின பிட்சாடன ருத்திரர் வீரபத்திரருத்திரர் முதலியோரின் செயல்களெல்லாந் தமிழ்மக்களின் செயற்கருஞ் செயல்களேயாம். ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கரென்று இகழ்ந்து பேசப்படுவாராயினர். இத் திறங்களெல்லாம் ஈண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/285&oldid=1592004" இலிருந்து மீள்விக்கப்பட்டது