பக்கம்:மறைமலையம் 29.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261

வேளாளர் நாகரிகம் விரிப்பிற் பெருகும். இனி யாம் எழுதுந் ‘தமிழர் ஆரியர் னி ஆ வரலாறு' என்னும் நூ நூலில் அ அவையெல்லாம் விரித்துக் காட்டுதும்.

இவ்வாறாக, ஆரியர் உலகத்திற்குப் பெரிது பயன்படும் ஆ, ஆன்கன்றுகள், எருதுகள், எருமைகள், குதிரைகள், யாடுகள், சிற்சில அமயங்களில் உயிர் பிறப்பினரான மக்கள் முதலான எத்தகைய உயிர்களையுங் கொன்று கட்குடித்து வெறியாட்டு வேள்விகள் புரிந்து, முழுமுதற் கடவுளை வணங்காத நாத்திகராய் உழன்றமையினாலேதான் அன்பு அருள் அறம் கல்வி முதற் கடவுள் வழிபாடு நாகரிகம் முதலியவற்றிற் றலைசிறந்து விளங்கிய பண்டைத் தமிழ் நன்மக்களான வேளாளரும் அவர்க்கு அரசராயிருந்த வேளிரும் இயற்கையிலேயே விருந்தோம்பும் வாழ்க்கையிற் சிறந்தவராயிருந்துந், தமது நாகரிக முறையில் திருத்தப்படுதற்கு இசைந்து வராத ஆரியர்மேல் வெறுப்புற்று அவர் தம்மை ஒறுத்துவரலாயினா ரென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/286&oldid=1592006" இலிருந்து மீள்விக்கப்பட்டது