பக்கம்:மறைமலையம் 29.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

20. சேக்கிழாரும் வேளாளரும்

6

இனித், திருத்தொண்டர் புராணம் அருளிச் செய்த ஆசிரியர் சேக்கிழார் வேளாளரைச் சூத்திரக் குலத்தவராகக் கூறுதல் என்னை? என்று அறிஞர் சிலர் நிகழ்த்திய தடைக்கு விடைகூறி, அதன்பின் அவர் நிகழ்த்திய ஏனைச் சிலவற்றிற்கும் முடிபு கூறுவாம். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் வேளாளக் குடியிற் பிறந்தவர்கள் பதின்மூவராவர் என்று உமாபதி சிவனார் தாம் அருளிச்செய்த சேக்கிழார் புராணத்திற் கூறியிருக்கின்றார். சேக்கிழாரும் இப் பதின்மூவர் வரலாறுகளையும் உரைக்கின்றுழிச் சத்திநாயனார்’ புராணத்தில் “விரிஞ்சை யூரினில் வாய்மை வேளாண்குலம்" எனவும், ‘விறன்மிண்டர்’ புராணத்தில் “அப்பொற்பதியினிடை வேளாண்குலத்தை விளக்க அவதரித்தார்’ எனவுந் 'திருநாவுக்கரையர்’ புராணத்தில் “மேதக்க நிலை வேளாண் குலத்தின்கண்” எனவுஞ், ‘சாக்கியர்’ புராணத்தில் “தகவுடைய வேளாளர் குலத் துதித்தார்” எனவுங், 'கோட்புலியார்' புராணத்தில் "வேளாண் குலம்பெருக வந்துதித்தார்" எனவும் ‘மானக் கஞ்சாறார்’ புராணத்தில் “விழுமிய வேளாண் குடிமை எனவும், ஏயர்கோன் கலிக்காமர்' புராணத்தில் "வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால்” எனவும், மூர்க்கர் புராணத்தில் "நஞ்சையமுது செய்தவருக்கு, இம் பர்த நலத்தில் வழியடிமை என்றுங் குன்றா இயல்பில் வருந் தம் பற்றுடைய நிலை ல வேளாண் குலத்தில் எனவும் அரிவாட்டாயர்’ புராணத்தில் “தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கிய, மிக்க செல்வத்து வேளாண்டலைமையார், எனவுஞ், ‘செருத்துணையார்’ புராணத்தில் 'திருந்து வேளாண் குடிமுதல்வர் எனவும், முனையடுவார்' புராணத்தில் "வேளாண் தலைமைக் குடிமுதல்வர் எனவும் பதினொரு நாயன்மார் குலத்தை 'வேளாண்குலம்' என்னும் பெயரினாலேயே விளங்கக்

6

66

""

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/289&oldid=1592012" இலிருந்து மீள்விக்கப்பட்டது