பக்கம்:மறைமலையம் 29.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

66

மறைமலையம் 29 -

"பார்ப்பனன் ஐயம் இன்றி மேற்கூறிய எழுவகைச் சூத்திரரிடத்திலிருந்தும் பொருளை வலிந்து எடுத்துக் காள்ளலாம். தம் தலைவன் எடுத்துக் கொள்ளுதற்ரிய பொருளையுடைய அந்தச் சூத்திரர் தம் பொருளுக்குச் சிறிதும் உரிமையுடையர் அல்லர்.”' எனவும் மநுகூறுஞ் சூத்திர இலக்கணந் தமிழ்நாட்டிலுள்ள வேளாளர்பாற் காட்டல் கூடுமா? இங்குள்ள வேளாளர் சண்டையிற் சிறையாகப் பிடிக்கப்பட்டவரா?அல்லது எவர்க்கேனும் ஊழியஞ் செய்பவரா? அல்லது பார்ப்பனர் தம் வேசிக்கேனும் மக்களாய்ப் பிறந்தவரா? அல்லது எவரிடத்தேனும் விலைக்கு வாங்கப்பட்டவரா? அல்லது எவராலேனும் விலைக்குக் காடுக்கப்பட்டவரா? அல்லது கால்வழி கால்வழியாக எவர்க்கேனும் அடிமையூழியஞ் செய்பவரா? அல்லது எந்தக் குற்றத்திற்காக வேனும் வேலை சய்பவரா? எந்த வேளாளராவது தமக்குந் தம் பொருளுக்கும் உரிமையில்லை யென்று அவை தம்மைப் பார்ப்பனர் வலிந்து எடுத்துக் காள்ள விட்டிருக்கின்றனரா? இங்குள்ள வேளாளர் இச்சூத்திர இலக்கணங்களெல்லாம் உடையர் என்று ஒருகால் அவ்வறிஞர் தாமாகவே நாட்டத் துணிவராயினும், ஆசிரியர் சேக்கிழார் வேளாளரையும் வேளாண் குலத்தையும் உயர்த்துக் கூறும் உயர்ச்சிகட்கெல்லாம் இவர் என் சொல்லமாட்டுவார்! மநு சூத்திரரைப்பற்றிக் கூறும் இழித்துரை இலக்கணங்களும், சேக்கிழார் வேளாளரைப்பற்றிக் கூறும் உயர்த்துரை இலக்கணங்களும் ஒன்றோடொன்று பெரிதும் மாறுபட்டு நிற்றலின் வேளாளரைச் சூத்திரரெனக் கோடல் சேக்கிழார்க்குக் கருத்தன்று என்பது தானே பெறப்படும்.

அற்றன்று, மநு கூறியவாறே வேளாளரைச் சூத்திரரெனக் காண்டாராயினுந் தாம் அவ் வேளாண் குலத்திற் பிறந்தமை பற்றி அதனைச் சேக்கிழார் உயர்த்துப் பேசுவாராயினரெனின்; அங்ஙனம் மநு கூறியதற்கு மாறாக அக் குலத்தைப் பொய்யாக உயர்த்துப் பேசுதல் சேக்கிழார்க்கு ஒரு பெருங் குற்றமாய் முடியுமன்றோ? அதுவேயுமன்றித், தமிழ்நாட்டின்கண் உள்ள வேளாளர் பண்டு தொட்டே உழவு வாணிகம் ஈகை அறம் முதற்கடவுள் வழிபாடு முதலியவற்றிற்கு உரியராய் அந்தணராயும் அரசராயும் அமைச்சராயும் படைத்தலைவராயுங் கொலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/291&oldid=1592016" இலிருந்து மீள்விக்கப்பட்டது