பக்கம்:மறைமலையம் 29.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

267

புலை தவிர்ந்து நாகரிகத்திற் சிறந்தாராயும் வாழ்ந்து வந்திருத்தல், பண்டைத் தமிழ் நூல் வழக்கானும், இன்றுகாறும் நடைபெற்று வரும் உலகவழக்கானும் நன்கு துணியக்கிடத்தலின், இவற்றிற் கெல்லாம் மாறாகச் சேக்கிழார் இவர்களைச் சூத்திரரெனக் கொண்டாரென்பது, பண்டை நூலாராய்ச்சியின்மை உலக வழக்கொடுமாறு கொள்ளுதல் என்னும் பெருங் குற்றங்களைச் சேக்கிழார் பால் ஏற்றுவதாய் முடியுமன்றோ? மநுவுக்கு மாறாகச் சேக்கிழார் பொய்கூறி வேளாளரை உயர்த்தினா ரென்று ஒரு பக்கத்தும், வேளாளர் உண்மைச் சிறப்பை உள்ளவாறு அறிவிக்கும் பண்டைத் தமிழ் நூல்களையும் அறியாமல் சேக்கிழார் வேளாளரைச் சூத்திரரெனக் கூறினாரென்று மற்றொரு பக்கத்துமாகச் சேக்கிழார்மேற் பொய்யும் அறியாமையும் ஆகிய பெருங் குற்றங்களை ஏற்றுதல் நன்றோ, திருத்தொண்டர் புராணத்தில் இரண்டு மூன்று டங்களில் மட்டும் வேளாளரைச் சூத்திரரெனக் கூறியவை சேக்கிழாராற் செய்யப்படாமல் ஆரியப் பார்ப்பனராற் செய்து சேர்க்கப்பட்டனவாமென்று கூறுதல் நன்றோ, என்பதை அறிவுடையார் ஆராய்ந்து கைக்கொள்ளக் கடவர். திருத்தொண்டர் ர் புராணத்திற் பதினொரு நாயன்மார் வரலாறுகளைக் கூறுகின்றுழி, அவர்களுடைய குலத்தை வேளாள குலமென அக்குலத்தினர்க்குரிய பல உயாந்த தன்மைகளாற் சிறந்தெடுத்துக் கூறிய ஆசிரியர் சேக்கிழார், "வாயிலார், இளையான் குடிமாறர்' என்னும் இருவர் புராணங்களில் ரண்டிடத்துமட்டும் இழிந்த சூத்திரப் பெயர்களால் வேளாளரைக் கூறியிருப்பரா? வாயிலார் புராணத்திற் போந்த "தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்' என்னுஞ் சொற்றொடரிற் ‘பழமை' எனப்பொருள் படுந் 'தொன்மை' 'தொல்' என்னுஞ் சொற்கள் ஒரு பயனுமின்றி இருகால்வந்து ‘கூறியது கூறல்' என்னுங் குற்றத்திற்கு இட நிற்றலின் இச்சொற்றொடர் சேக்கிழாராற் செய்யப் பட்ட படியாக வன்றிச், சூத்திரச் சொல்லை நுழைத்தற் பொருட்டு ஆரியப் பார்ப்பனர் எவராலோ திரிவு படுத்தப்பட்ட தொன்றா மென்பது துணியப்படும். இங்ஙனமே, இளையான்குடிமாறர் புராணத்திற் போந்த 'நம்புவாய்மையின் நீடு சூத்திர நற்குலம்’ என்னுஞ் சொற்றொடரில் இழிவினைக் குறிக்கஞ் சூத்திரச் சொல், 'நற்குலம்' என்னும் உயர்வினைத் தருந் தொடர்

னாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/292&oldid=1592018" இலிருந்து மீள்விக்கப்பட்டது