பக்கம்:மறைமலையம் 29.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம் 29 -

மொழியோடு இயைதற்கு உரிமையின்றி மாறுபடுகின்றமையின் அது ‘மாறுகொளக் கூறல்' என்னுங் குற்றத்திற்கிடனாய்ச், சேக்கிழாராற் செய்யப்படாமற் பிறரொருவராற் செய்யப் பட்டதேயா மென்பதனை நன்கு புலப்படுத்தும். இங்ஙனமே, சேக்கிழாராற் செய்யப்படாமல் ஆரியப் பார்ப்பனரால் இடையிடையே திரிபுபடுத்தப்பட்டனவுஞ் செருக்கப்பட்டனவு மாகிய வழுவுடையச் செய்யுட்களை அவரே செய்தனவாக நாட்டுதற்குப் புகுந்து, அறிவின் மிக்கஅச்சான்றோர்க்கு இத்தகைய புல்லிய குற்றங்களை ஏற்றுதற்கு இடந்தருதல் அறிவுடையார்க்கு முறையாகுமா கூறுமின்கள்!

னித், திருவாக்கூர்த் தேவாரத்தில் சன்றிரந்தார்க்கு

இல்லையென்னாது

ன்மையாற் ஈத்துவக்குந்

தன்மையார் என்று திருஞானசம்பந்தப் பெருமானது அருமைத் திருமொழியால் உயர்த்துக் கூறப்பட்டவர்கள் வேளாளரே என யாம் கூறச், சேக்கிழார் “புன்மையால் இரந்து சென்றார்க் கில்லையென் னாதே ஈயுந், தன்மையா ரென்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பை, மன்னனார் அருளிச் செய்த மறைத்திரு வாக்கூர் அவ்வூர்” என்று அவரை அந்தணராகக் கொண்டாரென எதிர்ப்பக்கத்தவர் கூறினார். திருஞான சம்பந்தப் பெருமான் அருளிச் செய்த திருவாக்கூர்த் தேவராப் பதிகத்தை முதலிலிருந்து ஒரு சிறிது உற்று நோக்குவார்க்கும், ஆண்டு அப்பெருமானாற் சிறப்பித் துரைக்கப்பட்டவர்கள் வேளாளரேயாதல் தெற்றென விளங்கா நிற்கும் அப்பதிகத்தின் மூன்றாஞ் செய்யுளில்,

“வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந் தாளாளர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே”

என வேளாளரையே அவர்க்குரிய பெயரால் வெளிப்பட எடுத்தோதி, யார் எவற்றைக் கேட்பினும் அவர்க்கு அவற்றை யெல்லாம் வரையாது கொடுத்துதவும் ஈகையிற் சிறந்தார் அவ் வேளாளர்களே யென்பதுந் தெளித்துக் கூறியிருக்கின்றார். வ்வாறு திருவாக்கூரில் இருந்த வேளாளர்கள் வள்ளன்மையால் மிக்கவர்கள் என்பது மூன்றாஞ் செய்யுளிற் கூறப்பட்டிருத்தலால் இதற்குப் பின் ஒன்பதாஞ் செய்யுளில் வரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/293&oldid=1592020" இலிருந்து மீள்விக்கப்பட்டது