பக்கம்:மறைமலையம் 29.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் 29 -

“பிரமாவின் வாயிலிருந்து வேதங்கள் பிறந்தன” (3,12,34,37) எனப் பாகவத புராணமும் “வேதங்கள் காயத்திரியிலிருந்து உண்டாயின” (11, 5, 16) என அரிவம்சமும், "சரசுவதியே வேதங்களுக்குத் தாய்" (சாந்திரபர்வம், 12, 920) என மகாபாரதமும், “அவன் (விஷ்ணு) இருக்கு சாம வேதங்களாய் இருக்கின்றான்” (3,3,19) என விஷ்ணு புராணமும் புகல்கின்றன.

எசுர்

னி, வேதங்களை ஆக்கிய இருடியர்களே தாந்தாமே அவ் வேதப்பாட்டுகளைப் பாடியவர்களாக அவற்றின்கண் விளக்கமாய்ச் சொல்லியிருக்கின்றனர்; அவற்றுட் சில வருமாறு, 'கண்ணுவர்கள் நினக்கு ஒரு வேண்டு கோளுரையைச் சலுத்துகின்றனர்' (1,47,2) எனவுங், “குதிரைகளை நுகத்திற் பூட்டும் ஓ இந்திரனே, கோதமர்கள் நினக்குச் செவ்வையான பதிகங்களைப் பாடுமாறுசெய்” (1,64,61) எனவும் “ஓ அகவினிகளே, நும்மைப் பெருமைப் படுத்தும் இவ் வேண்டுகோளுரைகளைக் கிரித்சமதர்கள் நினக்காகச் செய்தனர்” (2, 39,8) எனவும், "பதிகங்கனை ஆக்குவோனான விருகதுக்தன் ஏற்கற்பாலதும் மாட்சிமிக்கதும் ஆன ஒரு பதிகத்தை இந்திரனுக்குப் பாடினான்” (10, 54, 6) எனவும் இருக்கு வேதத்தினுள்ளேயே அவ்விருடிகள் சொல்லுதல் அறியப்படும். இங்ஙனம் இருடிகள் தாமே அப்பதிகங்களை ஆக்கினா ரென்பது அவ்விருக்கு வேதத்தில் இன்னும் பல விடங்களிலுஞ் சொல்லப் ஈண்டெத்துக்

அவையெல்லாம்

பட்டிருக்கின்றது. காட்டப்புகின் இது மிக விரியும்.

இங்ஙனமாக மேற்காட்டிய ஆரியமொழி நூலுரைகளில் ஓரிடத்தாயினுஞ் சிவபிரான் ஆலநீழலிலிருந்து அருந்தவர் நால்வர்க்கு ஆரியவேதங்களை அறிவுறுத்தினனென்னும் வரலாறு ஒரு சிறிதுங் குறிப்பிடப்படாமையால், தமிழ்நாட்டின்கட் பண்டுதொட்டுப் பழந்தமிழ் நூல்களில் வழங்கிவரும் அவ் வரலாறு, இறைவன் ஆலின் கீழமர்ந்து அருந்தவர்க்கு அறிவுறுத்தின தமிழ் மறைகளையே குறிக்கும் அல்லாமல், இந்திரன் வருணன் முதலான சிறு தெய்வங்கள்மேல் ஆரியர் பாடிய பாட்டுகள் நிறைந்த எசுர் சாமம் அதர்வம் முதலான ஆரிய நூல்களைக் குறியாதென்று கடைப்பிடிக்க. உண்மை யிவ்வாறிருப்ப, இற்றைக்கு ஐந்நூறாண்டுகட்கு முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/297&oldid=1592028" இலிருந்து மீள்விக்கப்பட்டது