பக்கம்:மறைமலையம் 29.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

273

வடமொழிக் கந்த

தமிழ்நாட்டின்கண் இயற்றப்பட்ட புராணத்தும், அதற்குச் சிறிதுகாலம் பிற்பட்டுக் கச்சியப் பசிவாசாரியாரால் அதன் மொழிபெயர்ப்பாகச் செய்யப்பட்ட தமிழ்க் கந்தபுராணத்தும், இவ் வரலாறு ஆரிய வேதங்களையே குறிப்பதொன்றாகப் பார்ப்பனர்களாற் கரவாய் ஒரு புரட்டுரை எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் செய்தது தம் ஆரிய நூல்கட்குப் பெருமை தேடிக் கொள்ளுதற்கேயாம். மெய்யும் பொய்யும் பகுத்துணர மாட்டாமல், ஆரியர்க்கு அடிமைகளாய்த் திரியுந் தமிழ்ப்புலவர் சிலரும் இக் கந்தபுராணப் புளுகை ஒரு மேற்கோளாய் எடுத்துக்கொண்டு ஆரிய வேதங்களையே சிவபெருமான் அருந்தவருக்கு ஆலின்கீழ் அறிவுறுத்தினான்' எனக் கரைகின்றனர்; ஆயினும், து மேற்காட்டிய ஆரிய நூன் மேற்கோள்களுக்கெல்லாம் முற்றும் முரணாதல் காண்க.

சிவபெருமான் அருளிச் செய்தவை எல்லாம், அறம் பொருள் இன்ப வீட்டின் இலக்கணங்கள் இன்னனவென்று விளக்கும் விளக்கவுரைகளும், அவற்றை எய்துதற்கு வாயிலாவன இவையாகலின் இவற்றைச் செய்கவென்னும் வியங் கோளுரை களும், அவற்றைப் பயவாதன இவையாகலின் இவற்றைத் தவிர்கவென்னும் விலக்குரை களுமாய்த் 'தொல்காப்பியம், ‘திருக்குறள்’ போல் இருக்குமே யல்லாமல் ஒப்புயர்வற்ற முழுமுதற் றெய்வமாகிய தன்னின் எத்தனையோ படி கீழ்த் தாழ்ந்து பிறப்பு இறப்புத் துன்பங்களிற் கிடந்துழல்வாரான ந்திரன் வருணன் முதலிய சிறு தெய்வங்களை வேண்டிப் பாடும் வணக்கவுரைகளாய் இருத்தல் ஒருவாற்றானும் இசையாதாகலின், இவ் வுண்மையினை நடுநிலை பிறழாது ஆராய்ந்தறிந்த கொள்க. எனவே, சிவபிரான் ஆலின்கீழிருந்து அறம் பொருள் இன்ப வீடுகளை அருந்தவருக்கு அறிவுறுத்திய அருமறைகள் தமிழ்நான் மறைகளேயாம் என்பதுந் தெற்றென வுணரற்பாற்று. இந் நால்வகை யுறுதிப் பொருள்களைச் சிறக்கக் கூறுந் திருவள்ளுவரின் திருக்குறள் ‘மறை' எனவும் ‘வேதம்' எனவும் பண்டுதொட்டு இன்று காறும் வழங்கப் படுதலுங்

காண்க.

6

ம்

அற்றேல், 'வேதம்' என்பது வடசொல்லன்றோவெனின்; ஆரிய நூல்களில் மிகப் பழையதாகிய 'இருக்குவேதத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/298&oldid=1592031" இலிருந்து மீள்விக்கப்பட்டது