பக்கம்:மறைமலையம் 29.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் - 29

எசுர்

வேதம் என்னுஞ்சொல் அறிவுநூல் என்னும் பொருளிற் காணப் படவில்லை. ஆனால், அதன் எட்டாவது மண்டிலம் 9 ஆம் பதிகம், 5 ஆவது செய்யுளில் மட்டும் 'வேதேந' என்னும் ஒரு சொற் காணப்படுகின்றது; அங்கு அச்சொல் ‘புற்கட்டினால்' என்னும் பொருளில் வழங்கப் பட்டிருக்கின்றது. வேதத்திலும் 'வேதம்' என்னுஞ் சொற் புற்கட்டினுக்கே பெயராக வழங்கப்பட்டிருக்கின்றது. சாம வேதத்தில் வேதம் என்னுஞ் சொற் காணப்படவேயில்லை. மற்று இறுதிக் கண்ணதாகிய அதர்வ வேதத்திலேதான் அது முதன் முதற் காணப்படுகின்றது; இவ் வதர்வவேதம் ஏனை மூன்று வேதங்களுக்கும் பிற்பட்ட காலத்தே தோன்றிய தென்பதற்கு, அவ் வதர்வவேதப் பாட்டொன்று' அம் மூன்று வேதப் பெயர் களொடு தன்னையும் எடுத்தோது மாற்றால் தெளியப்படும். எனவே ஏனை மூன்று வேதங்களோடு அதர்வவேதப் பாட்டு களையுஞ் சேர்த்து வேதங்களை நான்காக்கிய காலத்திலேதான், ஆரியருந் தமிழரும் ஒருங்குசேர்ந்து தொகுத்து வகைப்படுத்திய அவ் வாரியமொழிப் பாட்டுகளுக்கு 'வேதம்' என்னும் பெய்ா சூட்டப்படுவதாயிற்று.

இனி, இவ் வாரிய மொழிப் பாட்டுகளை அங்ஙனம் வேதங்களாக்கிய காலந்தான் யாதோவெனின், அது மகாபாரதப் போர் நிகழ்ந்த காலத்திற்கும் பிற்பட்டதேயாம். யாங்ஙனமெனிற், சுக்கில எசுர் வேதத்தைச் சேர்ந்த சதபத பிராமணத்திற் பாண்டவரின் வழித்தோன்றலாகிய ஜநமேஜய பரிக்ஷித் என்னும் அரசன் பெயர் கூறப்படுதலானும், பாண்டவர் ஐவரில் ஒருவனான சகாதேவமன்னன் பெயரும், அவன் புதல்வனாகிய சோமகன் பெயரும், பீஷ்மரின் தந்தையாகிய சந்தநுவின் பெயரும், அவனுடன் பிறந்த தேவாபி முனிவன் பெயரும் இருக்குவேதத்திற் காணப்படுதலானும், இத் தேவாபி முனிவனாற் செய்யப்பட்டபதிகம் ஒன்றும் அவ்விருக்குவேதத்திற் சேர்ந்திருத்தலானும் இருக்குவேதப் பாட்டுகள் முற்றும் இவ்வரசர்கள் காலத்திற் செய்யப்பட்டனவல்லவாயினும், அவையெல்லாம் ஒருங்கு தொகுத்து வகுக்கப்பட்ட காலம் மேற்குறிப்பிட்ட மன்னர்கள் காலத்திற்கும் பிற்பட்டதேயா மென்பது மட்டுந் தெற்றெனத் துணியப்படும். இதனாற், பாண்டவர் காலத்தவரான வியாசரால் ஆரிய மொழிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/299&oldid=1592035" இலிருந்து மீள்விக்கப்பட்டது