பக்கம்:மறைமலையம் 29.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் - 29

‘மறை’ என்னும் பெயரானும் வழங்கப்பட்டமையும் பெற்றாம். முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனும், அவனைப் பாடிய புலவர்களான காரிகிழார், நெட்டிமையார், நெடும்பல்லி யத்தனார் என்னும் புலவர்களும் இப்போதுள்ள குமரிமுனைக்குத் தெற்கே பண்டைநாளில் நிலனாயிருந்த குமரிநாட்டில் இருந்தவர்கள் என்பதற்கு, அக் குமரிநாட்டில் ஓடிய பஃறுளியாற்றை நெடும்பல்லியத்தனார் என்னும் புலவர் "நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" என எடுத்துக் கூறுமாற்றால் தெளியப்படும். பஃறுளியாறு ஓடிய பண்டைத் தமிழகமாகிய குமரிநாடு பின்னர்க் கடல் கொண்டமை "பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள"4 எனப் போந்த சிலப்பதிகார அடிகளால் இனிது அறியப்படும்.

3

பின்னர்

எனவே, பண்டைத் தமிழ் அறிவுநூல்கள் ‘மறை' எனவும், ‘வேதம்' எனவும் பெயர்கொண்டு வழங்கினமை தெள்ளிதிற் புலப்படும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு கூறாக வகுக்கப்பட்டபண்டைத் தமிழ் மறைகளின் விழுப்பமும் நுட்பமும் நன்குணர்ந்தே தமிழரோடு உறவாடிய ஆரியர் தாங்கொணர்ந்த பாட்டுகளையுந் தமிழ்ச்சான்றோர் உதவியால் நான்கு கூறாக வகுத்துக்கொண்டு, அவற்றிற்குத் தமிழர் வழங்கிய ‘வேதம்' என்னுஞ் சொல்லையுஞ் சூட்டிவிட்டனர். குமரி நாடு கடல்வாய்ப்பட்ட காலத்திலேதான் தமிழ் வேதங்களும் ஏனைப் பல்லாயிரந் தமிழ் நூல்களும் நீரில் அமிழ்ந்திப் போயின. ஓர் அரக்கன் வேதங்களை யெடுத்துக் கொண்டு கடலில் அமிழ்ந்திப் போயினான் என்னும் பழையபுராண கதையுந் தமிழ் வேதங்கள் கடல்கோட்பட்ட உண்மையினையே தெரிப்பதாகும். முதலிலிருந்த தமிழ்வேதங்கள் இங்ஙனங் கடல்வாய்ப் பட்டனவேனும், அவற்றின்கட் கூறப்பட்ட பொருள்கள் தொன்றுதொட்ட வழக்காய்த் தொடர்ந்து வருதலின், அதன்பின்றோன்றிய காலத்தில் ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் அவற்றை யெல்லாந் தமது அஃகா அறிவால் முழுதெடுத்துத் தொகுத்து வகுத்துத் திருக்குறள்

இயற்றியருளினாரென்க.

அறம்பொருளின்பங்களை இலக்கண வகையால் விளக்குவது 'தொல்காப்பியம்' என்றும், இலக்கிய வகையால் விளக்குவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/301&oldid=1592045" இலிருந்து மீள்விக்கப்பட்டது