பக்கம்:மறைமலையம் 29.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ள

  • வேளாளர் நாகரிகம்

277

‘திருக்குறள்' என்றும் உணர்தல் வேண்டும். இவ்விரண்டு நூல்களிலும் ‘வீட்டியல்' சுருக்கமாகக் கூறப் பட்டமையின், அதனை விரித்து விளக்குதற்கே, ‘ஆகமங்கள்' எனப் பெயரிய தமிழ்நூல்கள் பின்னர் எழுந்தன. இப்போது வடமொழியில் எழுதப்பட்டுள்ள சிவாகமங்களெல்லாம் பழைய நாளிலிருந்த தமிழாகமங்களின் மொழி பெயர்ப்பேயாம். இஃது எற்றாற் பெறுதுமெனின்; இவ்வாகமங்களிலுள்ள சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகைப் பொருள் களெல்லாந் தமிழ்நாட்டையுந், தமிழ்நாட்டிலுள்ள சிவபிரான் கோயில்களையுந், தமிழரது மெய்யுணர்வி னியல்பையுமே பற்றியனவாய் இருப்பக் காண்டுமல்லது, ஆரியர் பெருந் தொகையினராய் வந்து குடியேறிய வடநாட்டையும் வடநாட்டுக் கோயில்களையும் வடவரது உணர்விQ யல்பையும் பற்றியனவாய் இராமையும், வடக்கேயுள்ள மிகச்சிறந்த வடநூற் புலவர்களும் இச் சிவாகம நூற்பொருள்களை ஒருசிறிதும் உணராராயிருத்தலும் ஆ கிய ஏதுக்களாற் பெறுதுமென்பது. தமிழ்மறைகள் கடல் கொண்டு மறைந்த பின்னரே, ஆரியமொழிப் பாட்டுகள் வேதங்களெனப் பெயர் பெற்று ஆரியரது பெரு முயற்சியாற் பெரிது வழங்கலாயின.

அற்றேற் கடல்கோட்பட்டவை தமிழ்வேதங்களே யல்லாமல், ஆரியவேதங்கள் அல்லவென்பதற்குச் சான்று என்னையெனிற்; கூறுதும், பண்டைநாளிலேயே தமிழ்மொழி எழுத்துவடிவில் எழுதப்பட்டு வந்ததொன்றாகும்;

அவ்வுண்மை,

“உட்பெறு புள்ளி யுருவா கும்மே”

“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”

66

66

‘எசுர ஓகரத் தியற்கையும் அற்றே”

'புள்ளி இல்லா எல்லாமெய்யும்

உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும் ஏனை யுயிரோடு உருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல உயிர்த்த லாறே’

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/302&oldid=1592050" இலிருந்து மீள்விக்கப்பட்டது