பக்கம்:மறைமலையம் 29.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

279

'மறைகள்' ஆகும்; அத் தகுதிப்பாடு இல்லாதார்க்கு அந் நுண்பொருட் பெற்றிகளை அவை உணர்த்துவன அல்ல. ஆகவே மறைகள் எல்லார் மாட்டும் பரவி வழங்குவனவும் அல்ல, தகுதியுடையார் சிலர்க்குள் மட்டும் வழங்கி, அவர் இல்லையானவழி அவைதாமும் இல்லையாதலே மரபு.

பண்டைத் தமிழகமாகிய குமரி நாட்டில் உயிர்வாழ்ந்த பண்டைத் தமிழ்மக்கள், தமது நாட்டின் நிலவள நீர் வளத்தானுந், தமக்குள்ள அறிவு அன்பு அருள் கடவுள்வழிபாடு முதலான நலங்களானும் நாகரிகத்தில் நாளுக்குநாட் பிறைவளருமாறு போல் வளர்ந்து வந்தனர். அந் நாளிற் கடவுளின் திருவருட் பேரின்பத்தைப் பெறத்தக்க பெரியாரும் அவருட் பலர் மிகுந் திருந்தனர். அதனாற் கடவுளின் பேரருளும் அவர்பாலிருந்து அவர்க்கு இம்மை மறுமைக்குரிய உதவிகளையெல்லாம் ஆற்றிவந்தது. அவ்வாறு இறைவனருள் அவர்க்கு உதவியாய் நின்று, அவரிற் சான்றோராயிருந்தாருள்ளத்தை உந்தி வந்தமையினாலேயே, நின்றுந் தமிழ்மறைகள் தோன்றித் தக்கார்க்குப் பயன்படலாயின. இங்ஙனமெல்லாம் நாகரிக வாழ்க்கையிற் சிறந்தோங்கி வந்த பண்டை க் குமரிநாட்டுத் தமிழ்மக்களின் கால்வழியில் வந்தோர் காலஞ் செல்லச் செல்லத் தாம் பெற்ற பொருட் செல்வத்திலும், அதன் வாயிலாக வருஞ் சிற்றின்ப விளையாட்டிலும் இறங்கித், தம் முன்னோர்க்குரிய அன்பு அருள் கடவுள்வழிபாடு என்பவற்றில் வழுவித், தீய ஒழுக்கத்தினராய் மாறவே, அவருட் சான்றோராயினார்

அச் சான்றோர்பால்

தொகை சுருங்கிற்று. அவரைத் திருத்துதற்கு வழியாவது அவர் மயங்கிய இம்மைச் செல்வத்தை யழித்தலேயெனத் திருவுளங்கொண்டு இறைவனுக்குஞ் சினம் மூண்டது. உடனே, தமிழ் நாட்டுக்கு வடக்கிலும் மேற்கிலுங் கடல்களாய் இருந்த பகுதிகள் நிலங்களாய் மாற, அக் கடல்கள் வற்றிய நீர் ஆவியாய் மேலெழுந்து, கடவுளின் திருவருளாணையாற் குமரிநாட்டிற் பொழிந்து பெருக்கெடுத்து அதனைக் கடலாக்கி அழித்தது. அக்காலத்து அழிந்துபட்ட அந் நாட்டில் முன்னே அருகி வழங்கி வந்த தமிழ்மறைகளும், பெருகிய வழக்கில் இல்லா ஏனை எண்ணிறந்த தமிழ்நூல்களும் அவ் வெள்ளத்தே புக்கு மறைந்தன, மற்றுத் தொல்காப்பியமோ, அறம் பொருள் இன்ப வீடுபேற்றுறுதிப்பொருள் நுட்பங்களைத் தக்கார்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/304&oldid=1592060" இலிருந்து மீள்விக்கப்பட்டது