பக்கம்:மறைமலையம் 29.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

281

களும் எண்ணிறந்தன! நலங்களும் எண்ணிறந்தன! இவ்வளவுக்குந் தப்பிப் பிழைத்துத் தொல்காப்பியமுந் திருக்குறளும் ஏனைத் தமிழ்நூல்கள் சிலவும் இன்னும் யாம் காணக்கிடைத் திருப்பதை நினையுங்கால், இன்னுந் தமிழ்மக்களில் தக்கார் சிலர் உளரென்பதும், அதனால் எல்லாம் வல்ல சிவத்தினருள் தமிழர்க்குந் துணையாய் இன்னும் உதவுகின்றதென்பதும் புலனாம்! ஆகவே, தமிழிலக்கண மறையாகிய தொல்காப்பியந்,

தன்

காலத்து உடன் வழங்கிய தமிழ்மறைகள்போல் தக்கார்க்குள் அருகிய வழக்காயின்றி, தமிழ் நாடெங்கணும் பெருகிய வழக்காய் இருந்தமையினாலேதான், அஃது இன்றுகாறும் வழங்குகின்றதென ஓர்ந்து கொள்க. அது கிடக்க.

1

'மறை' என்பது பருப்பொருளறிவினார்க்கு விளங்காத நுண்ணிய மறைபொருள்களை உணர்த்துதல் பற்றி அறிவு நூல்களுக்குப் பெயராக அமைக்கப்பட்டாற் போல், ‘வேதம் என்னுஞ் சொல்லுந் தமிழ்ச் சொல்லாயின் அதுவும் அத்தகைய தொரு பொருளைத் தருதல் வேண்டுமாலெனின்; 'வேய்தல்’ என்னுஞ் சொல் ‘மூடுதல்' என்னும் பொருளை யுணர்த்துதல் பழைய நூல்களிற் காணப்படுகின்றது, இக்காலத்தும் வீடு கூரைமூடுதலைக் ‘கூரை வேய்தல்' என்ப. இவ்வேய்தல் என்னுஞ் சொல்லுக்கு முதனிலை 'வே' என்பதேயாகையால் அதனடியாய்ப் பிறந்த 'வேதம்' என்னுஞ் சொல் 'மூடுபொருள் உடையது அல்லது ‘மறைபொருள் உடையது' என்னும் பொருட்ட தேயாம்' ஆகவே, 'மறை' 'வேதம்' என்னுந் தமிழ்ச் சொற்களிரண்டும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாமென்க. இவ்வாற்றால், 'வேதம்' என்பது

2

L பழைய தமிழ்ச் சொல்லே யாதலும், அது பின்னர் ஆரியரால் எடுத்துத் தமது பழைய நூலுக்குப் பெயராக வழங்கப் பட்டமையுந் தெளிந்து கொள்க. அஃது யாங்ஙனம்? வடசொற்களே தமிழில் வந்து வழங்கக் காண்டுமன்றித், தமிழ்ச் சொற்கள் அவ்வாறு வடமொழிக்கட் சென்று வழங்குதல் கண்டிலமாலெனின்; இது மொழியாராய்ச்சி யில்லாதார் கூற்றாம். இருக்குவேத காலந் தொட்டே பல்லாயிரந் தமிழ்ச் சொற்கள் வடமொழிக்கட்புகுந்து வழங்கலாயின. அவற்றுட் பலவற்றைத் 'தமிழ் வடமொழியினின்று பிறந்ததாமா?" என்னும் எமது கட்டுரையில் ஞானசாகர முதற்பதுமத்தில் நெடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/306&oldid=1592070" இலிருந்து மீள்விக்கப்பட்டது