பக்கம்:மறைமலையம் 29.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

-

❖ மறைமலையம் - 29

பாற் புலவர் பலர் இருந்தனர். அவருட் சங்ககாலத்திருந்தவர் வேறு; சேரமான் பெருமாள் காலத்திருந்தவர் வேறு. சேரமான் பெருமாள் கைலைக்குச் சென்ற காலையில் உடன்சென்ற ஒளவையார் பாடிய செய்யுளொன்று தமிழ் நாவலர் சரிதையிற் காணப்படுதலானும்,

"தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியுங் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒரு வாசக மென் றுணர்"

என்னும் ஒளவையார் செய்யுளிற் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த தேவாரங் குறிப்பிடப்படுதலானுங் கி.பி.

ன்பதாம் நூற்றாண்டில் முற்பகுதிவரையில் சுந்தரமூர்த்தி நாயனாரும் அவர் தோழரான சேரமான் பெருமாள் நாயனாரும் இருந்தமை மேலே காட்டப்பட்டமையின் அவர் அருளிச்செய்த தேவாரத்தைக் குறிப்பிட்ட ஔவையார் அவ்வொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலன்றி அதற்கு முன்னிருந்தவராதல் செல்லாமையானுஞ், சங்காலத்து

ளவைப் பாட்டுகளின் தமிழ்நடையும் ஒன்பதாம் நூற்றாண்டி லிருந்த ஔவைப் பாட்டுகளின் தமிழ்நடையும் பெரிதும் வேறுபட்டு நிற்றலானும், முதல் ஒளவையாற் பாடப்பெற்ற அரசர்களின் காலங் கி.பி. முதல் நூற்றாண்டின் கண்ணதாயிருப்ப இரண்டாம் ஔவையாற் பாடற்பெற்றார் காலங் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின்கட் படுதலானும், அம்பர்கிழான் அருவந்தைச் சேந்தனைப் பாடிய ஒளவையார் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த வேறொருவரே யாவரென்று துணிந்துகொள்க. எனவே அம்பற் சேந்தனைப் பாட்டுடைத் தலைமகனாகக் கொண்ட திவாகரம்’ கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலாதல் பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் இயற்றப்பட்டதாகல் வேண்டுமென்க. ஆகவே, தமிழ் வேதங்கள் மறைந்தபிற் பல நூற்றாண்டுகள் கழிந்து, ஆரியரும் ஆரியப்புரட்டும் மலிந்த பிற்காலத்தே இயற்றப்பட்டதாகிய 'திவாகரம்' ஆரிய வேதங்களை முதல்நூல் என்று உயர்த்துக் கூறுதல் ஒரு வியப்பன்று; அது பற்றி யாம் கூறியது பிழைபடுதலும் இல்லையெனத் தெளிக.

ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/309&oldid=1592085" இலிருந்து மீள்விக்கப்பட்டது