பக்கம்:மறைமலையம் 29.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேளாளர் நாகரிகம்

287

அவையெல்லாவற்றினுள்ளம் ஊடுருவிநிற்றல் இனிது விளங்காநிற்கும். இங்ஙனமாக, ‘வேதம்' என்னுஞ் சொல்லின் முதனிலை தமிழ்ச் சொற்கள் பலவற்றில் நின்று மூடுபொருளை யுணர்த்தி நிற்கக் காண்டலானும், அவ்வாறது வடமொழிக்கண் நிற்பக் காணாமையானும், அச்சொல் தமிழ்சசொல்லே யாதல் தெளியப்படும். ஈண்டுக் ஈண்டுக் காட்டிய காட்டிய இச் சொல்லராய்ச்சியை இன்னும் விரிப்பிற் பெருகும். ஆதலால், யாம் இருபத்தைந் தாண்டுகட்குமுன் ஞானசாகர முதற்பதுமத்திலெழுதிய `தமிழ் வடமொழியினின்று பிறந்ததாமா?' என்னுங் கட்டுரையில் இவ்வாராய்ச்சி முறையைக் கண்டு கொள்க.

9. புறநானூறு,385.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/312&oldid=1592100" இலிருந்து மீள்விக்கப்பட்டது