பக்கம்:மறைமலையம் 29.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

289

கழகத்தில் வந்து அதற்குரிய வழிவகைகளை ஆராய்பவர் களாகக் காணப்படுகின்றனரே யல்லாமல், இந்த ஊனுடம்பின் பொருட்டாகவே வாழ்பவராகக் காணப்படவில்லை. ஆகவே, மக்கள் எல்லாரும் பிறப்பளவில் ஒத்த இயல்பினரே யல்லாமல் வேறெவ்வகையான ஏற்றத்தாழ்வும் உடையரல்லர். இவ்வுண்மை தெருட்டுதற்கே தெய்வப்புலமைத் திருவள்ளுவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்

என்றும், நாலடியார் ஆசிரியர்,

“நல்ல குலமென்றும் தீய குலமென்றுஞ் சொல்லள வல்லாற் பொருளில்லை"

என்றுந், திருமூலநாயனார்,

66

'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”

என்றும் அருளிச் செய்வாராயினர்.

L

இங்ஙனமாக மக்களெல்லோரும் ஒத்த இயல்பினரா யிருக்க, அவருள் முதன்முதல் அறிவானும் முயற்சியானும் மிகுந்து கொலை புலை முதலான கொடிய செயல்களை ஒழித்து, உழவுதொழிலால் உலகத்தை வளம்படுத்திய சிலரே முதன்முதல் நாகரிகத்திற் சிறந்த வேளாளராயினர். அங்ஙனம் அவர்போற் சிறவாமல் அவ் அறிஞரின் ஏவல்வழிநின்ற ஏனையோர் அவரவர் தகுதிக்குந் தொழிலுக்கும் ஏற்றப் பதினெண்ம ராயினர். இதுவே மக்கள் பல்வேறு வகுப்பாய்ப் பிரிந்ததன் உண்மை வரலாறாம்.

அடிக்குறிப்பு

1. See. for instance, Lord Avebury's Pre - historic Times of S. Laing's Human Origins.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/314&oldid=1592111" இலிருந்து மீள்விக்கப்பட்டது