பக்கம்:மறைமலையம் 29.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

23. தூயராவார் எல்லாம் வேளாளராதற்கு உரியர்

இனி, வேளாளர் அல்லாத ஏனையோரில் அறிவு ஆற்றல்களானுங் கொலை புலை தவிர்ந்த அருளொழுக்கத் தானுஞ் சிறந்து வருவாரை வேளாளர் தம்மினத்திற் சேர்த்து அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்தல், அவ்வாற்றால் அவர் தம்மினத்தையும் பெருக்கி, அருளறங்களையும் வளரச் செய்து, ஏனையோரையும் புனிதராக்குமாதலால், அஃது உலகத் திற்குப் பெரு நன்மையைத் தந்து இறைவனது திருவுளக் குறிப்பை ஈடேற்றுஞ் செயற்கரிய செயலாகுமே யல்லால், அது வேறு எத்தகைய தீங்கும் விளைவியாது. ஏனை வகுப்பினரிற் சிறந்தாராய் உள்ளவரை வேளாளர் தம்மினத்திற் சேராமல் தாம் தனிநின்றுகொண்டு 'நாங்கள்' இருபது வீட்டுக்குள்ளே தான் கொள்வது கொடுப்பது' என்று வெறுஞ் செருக்குரை பகர்வதால் அவர்க்கு வரும் ஏற்றஞ் சிறிதுமில்லை; ங்ஙனம் தனி நின்ற எத்தனையோ வேளாள வகுப்புகள் பிள்ளைகட்குப் பெண்கள் கிடையாமையாலும் பெண்களுக்குப் பிள்ளைகள் கிடையாமை யாலும், இன்னும் எத்தனையோ பல பொருந்தாக் கட்டுப்பாடுகளாலும் அகம் புழுங்கி நாளடைவில் மாய்ந்து போயின; இன்னும் எத்தனையோ மாய்ந்து வருகின்றன; பின்னும் பல மாயும் நிலைமையிலிருக்கின்றன.

இத்தகைய போலிக் கட்டுப்பாடுகள் சிறிதும் இல்லாத கிறித்து சமயத்தவர் தொகை நாளுக்குநாட் பெருகி உலகத்தைக் கவர்ந்துவருகின்றது; இதற்கு ஏற்ற பரிசாக வேளாளருந் தாம் வைத்திருக்கும் பொருந்தாக் கட்டுப்பாடுகளை யொழித்து, ஏனை வகுப்பாரிற் புனிதராய் வருவாரைத் தம்முடன் சேர்த்துத் தம்மினத்தைப் பெருக்கி உலகில் அறத்தை வளர்த்தலே செயற் பாலதாம். புனிதராய் வருவார் எத்தகைய இழி குலத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/315&oldid=1592115" இலிருந்து மீள்விக்கப்பட்டது