பக்கம்:மறைமலையம் 29.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

24. ஆரியச் சேர்க்கை

தமிழர்க்கும் தமிழ்க்கும் ஆகாது

இதனோடு,

தமிழ்மக்களின்

முன்னேற்றத்திற்குப் பலவகையிலுந் தடையாய் நிற்கும் ஆரியப் பார்ப்பனர் தம்மையணுகுதற்குந், தாம் அவர் சொல்லைக் கேட்டு நடத்தற்குந் தமிழர் எவருஞ் சிறிதும் இடந்தருதல் ஆகாது. தமிழ் நாட்டுத் திருமடங்களின் ஆசிரியர்களுங் குறுநில மன்னர்களும் (சமீந்தார்கள்), செல்வர்களுங், கற்றவர்களும், பிறரும் இப்போது தம்முடைய சீருஞ்சிறப்பும் அறிவும் புகழும் இழந்து தமது மேனிலை குலைந்து சிறுமை எய்தி அல்லல் உழப்பதெல்லாம் ஆரியப் பார்ப்பனரைத் தம்முடன் சேர்த்து அவர் சொல்வழி நடத்தலினாலேயாம். தமிழரிற் செல்வமுஞ் சிறப்பும் உடையார் இவரென்று கண்டால் ஆரியப் பார்ப்பனர் உடனே அவர்பாற் சென்று சூழ்ந்து அவர்க்கு இணங்கிய படியாக வெல்லாம் நடந்து, அவர்பாற் றாம் பெறவேண்டியன வெல்லாம் நயமாகப் பெற்றுக்கொண்டு, அவர் அச் செல்வமுஞ் சிறப்பும் இழத்தற்கு வேண்டும் வழிவகைகளெல்லாந் திறமையாகச் செய்து, முடிவில் அவர் வறியராகித் தாழ்வடைந்தபின் அவரைவிட்டு நீங்குவார்; தம்மாற் சிறுமையடைந்த அவரைப் பின்னர்த் திரும்பியும் பாரார்; அவரைக் காணநேர்ந்தால் அவரை அறியாதார் போல் அகன்று ஒளித்துப் போவர். இங்ஙனம், முன்னமே உயர்ந்து நிற்குந் தமிழ்ப் பெரியாரையுங் கரவாகக் கெடுத்துத் தாழ்த்தித், தாழ்ந்து கிடக்குத் தமிழரையும் உயரவொட்டாமற் பெருந்தடைகளை விளைத்துத் தமிழ் மக்களெல்லார்க்குந் தொடர்ந்து தீது புரிந்துவரும் பார்ப்பனரை நஞ்சினுங் கொடியராக நினைந்து, அவர் எவ்வகையிலுந் தம்பால் அணுகுதற்கு இடந்தராது விழிப்பாயிருத்தலே தமிழர் ஒவ்வொருவருங் கருத்தூன்றிக் கைக்கொள்ளற் பாலதாகிய முதற்பெருங் கடமையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/317&oldid=1592125" இலிருந்து மீள்விக்கப்பட்டது