பக்கம்:மறைமலையம் 29.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

293

இன்னும், ஆரியப் பார்ப்பனர் தமக்குரியதாகக் கருதிப் பெருமை பாராட்டிக்கொள்ளும் ஆரியமொழி பல்லாயிர ஆ ண்டுகளுக்கு முன்னரே உலகவழக்கில் இன்றி இறந்து ஒழிந்தமை கண்டு, அதனைத் திரும்பஉயிர்பிக்க எவ்வளவோ முயன்று பார்த்தும் அது முடியாமையின், மெல்ல மெல்லச் சமஸ்கிருதமொழிச் சொற்களைத் தமிழிலுந், தமிழோடு இனமாகிய மலையாளம்,தெலுங்கு, கன்னடம் முதலாகிய மொழிகளிலும் நுழைத்து, அவ்வாற்றால் அம்மொழிகளின் தனிச் சுவையினையும் ஆற்றலினையும் கெடுத்து, அவற்றை வடமொழியுருவாக்கப் பெரிது முயன்று, அம் முயற்சியில் அரைவாசிக்குமேல் தேர்ந்து விட்டார்கள்; தமிழ்மக்களைத் தவிர, மலையாளத்தாருந் தெலுங்கருங் கன்னடரும் எளிதிலே ஏமாறிவிட்டார்களாதலால், ஆரியப் பார்ப்பனர் அம் மொழி களை முக்கால்வாசி வடமொழியுருவாக்கிவிட்டார்கள்.

L

பண்டுதொட்டுத் தமிழ்மக்கள் நாகரிகத்திற் சிறந்தாராய்த் தமது தமிழ் மொழியை நன்கு ஆராய்ந்து அதற்கு இலக்கண இலக்கிய வரம்புகட்டி அதனைப் போற்றித் தனித்து வழங்குதலின், ஆரியப்பார்ப்பனர் அதனை வடமொழியுருவாக்க எவ்வளவோ முயன்றும் அது கைகூடாமல், அதனைக் கெடுக்க இன்னும் எவ்வளவோ சூழ்ச்சி செய்து வருகின்றார்கள். அவர்களின் கரவையுஞ் சூழ்ச்சியையும் அறியாத தமிழ்ப்புலவர் சிலர் அவர்தம் வலையிற் சிக்கிக்கொண்டு, தமிழைத் தனித்து வழங்கல் இயலாதென்றும் ஏராளமான வடசொற்களை அதன்கட் சேர்த்து வழங்கலே அதனை வளம்படுத்துவதாகு மென்றும் பொருந்தாவுரை கூறித் தனித் தமிழ் வளத்தைக் கடுக்கப் பார்க்கின்றார்கள். தண்ணீரை ‘ஜலம்’ என்றும், தலைமுழுகுதலை 'ஸ்நாநம்' என்றும், உணவை ‘ஆகாரம்’ 'போஜநம்' என்றும், ஒளியைப் 'பிரகாசம்' என்றுஞ், சோற்றை 'அன்னம்' ‘சாதம்’ என்றும், பயனைப் 'பிரயோஜனம்' என்றும், வழிபாட்டைப் ‘பூஜை' ‘அனுஷ்டானம்' என்றும் இன்னும் ங்ஙனமாகப் பலப் பல வட சொற்களை இப்போதே நுழைத்து விட்டமையால் தண்ணீர் முதலான தமிழ்ச்சொல் வழக்கு வரவரக் குறைந்து வருகின்றது. இவ்வாறே தமிழ்ச்சொல் வழக்கு வ் வான்றாய் ஒழிந்துபோக, அவற்றிற்கு மாறாக வடசொற்களே வழங்குமானால் அப்புறந் தனித் தமிழ்மொழி என்பதே ஒன்று இல்லையாய் விடுமன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/318&oldid=1592130" இலிருந்து மீள்விக்கப்பட்டது