பக்கம்:மறைமலையம் 29.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

295

எவ்வாற்றால் நோக்கினும், உயர்ந்ததாய் ஒளிரும் விழுமிய நம் செந்தமிழ்மொழிச் சொற்களை வழங்காமல், இறந்துபட்ட வடமொழிச் சொற்களை உயர்ந்தனவாய்ப் பிழைபடக் கருதி வழங்கும் பேதைமைச் செயலை அறவே ஒழிமின்கள்! உயர்ந்த பல கருத்துக்களையும், புதுப் புதுப் பண்டங்களையும் வழங்குதற்கேற்ற தமிழ்ச் சொற்கள் ஏராளமாய் இருப்பவும், அவையில்லையெனக் கரைவாருரை கரவுரையாகல் வேண்டும். அல்லது அது பேதைமையே யாகல்வேண்டும். ஆதலால் தமிழ்மொழி கற்குந் தமிழ் இளைஞர் ஒவ்வொருவரும், அவர் தமக்குத் தமிழ் கற்பிக்குந் தமிழாசிரியர் ஒவ்வொருவரும் வடமொழி முதலான பிற மொழிச் சொற்களைத் தமிழின்கண் வந்து நுழையாதபடி அறவே விலக்கி, இப்போது வழங்காமற் பழைய தமிழில் வழங்கிய சொற்களையே மீண்டும் எடுத்து வழங்கித் தமிழை வளம் படுத்துப் பாதுகாக்கக் கடவராக! வடமொழி முதலானபிறமொழிச் சொற்களைக் கலவாமல் எத்தகைய பொருளையுந் தனித் தமிழில் எழுதக்கூடும் என்பதற்கு, யாம் தனித்தமிழ் நடையில் எழுதியிருக்கும் இந்நூலும், 'மாணிக்கவாசகர்' வரலாறுங், காலமும், முல்லைப் பாட்டாராய்ச்சியுரை' 'பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை' முதலான ஏனை எம்முடைய நூல்களுமே சான்றாம்.

6

னி, மணவினை பிணவினை முதலியன நடாத்துங் காலங்களில் தமிழ்மக்களில் ஒவ்வொரு வகுப்பாருந் தத்தம் இனத்தவரிலிருந்தே அவற்றைச் செய்துவைத்தற்குச் சிலரை ஏற்படுத்தி, அவரைக்கொண்டு அவற்றை நடப்பித்துக் கொள்ளல் வேண்டும். இங்ஙனந் தத்தம் இ னத்தவரிலேயே சிலரை ஆசிரியராக அமர்த்தி மேற்கூறிய வினைகளைச் செய்வித்தல் சோழநாடு பாண்டியநாட்டிலுள்ள சைவ வேளாளரிற் பண்டு தொட்டு இன்று காறும் நடந்து வருகின்றது. தமிழர்கள் தாம் நடத்தும் மணவினை பிணவினைகளுக்கு ஆரியப் பார்ப்பனரை ஆசிரியராக வருவித்துவைத்து நடத்தல் பெருங்குற்றமாமென்று அறிவு நூல்களுங் கூறுகின்றன. ஆதலால், தமிழர் தம்வினை களுக்கு ஆரியப் பார்ப்பனரை வருவித்தலை அறவே விட்டொழித்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/320&oldid=1592141" இலிருந்து மீள்விக்கப்பட்டது