பக்கம்:மறைமலையம் 29.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

-

மறைமலையம் 29

ஆரிய

இனிப், பெரும்பாலுந் தமிழர்க்குரிய சிவபிரான் கோயில் பருமாள் கோயில்களில் வழிபாடு ஆற்றுவோர் தொன்று தொட்டுத் தமிழ் அந்தணர்களாகவே இருக்கின்றனராயினும் அவரும் ஆரியப் பார்ப்பனரோடு தம்மைச் சேர்த்துக் கொள்ளும் ம் பொருட்டு வேதங்களையும் வட மொழியையும் பயன்படுத்துகிறார்கள். சிவபிரானுந் திருமாலும் பண்டுதொட்டுத் தமிழ் முதுமக்களால் வணங்கப்பட்டு வந்த தமிழ்த் தெய்வங்களாகும். எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளே தந்தை வடிவிற் சிவபிரான் எனவுந், தாய் வடிவில் திருமால் எனவும் வைத்து வணங்கப்பட்டது. இவ்விருவரும் பிறவாதவர், றவாதவர். இவ் இருதெய்வங்களையும் பழைய ஆரியர் சிறிதும அறியார். இருக்குவேதத்தில் வணங்கப்பட்ட உருத்திரர்' தமக்கு மேற்பட்ட சிவபிரான் றன் திருவருளாணை வழி நின்று படைத்தல் காத்தல் அழித்தல் என்னம் முத் தொழில்களைப் புரிபவர். இருக்குவேதத்தில் வணங்கப்பட்ட விஷ்ணு’ வோ பகலவனே யல்லாமல், யல்லாமல், உலகங்களைப் படைத்துக் காக்கும் எல்லாம்வல்ல உலகன்னையாகிய திருமால் அன்று. பிற்காலத்திற்றென்னாடு புகுந்த ஆரியப் பார்ப்பனரே ஆண்மைச் செயல்புரிந்த அரசரையும் பிறரையுந் திருமாலின் பல்வகைப் பிறவிகளாகக் கொண்டு பொய்ப் புராண கதைகளை வடமொழியில் வேண்டுமட்டுங் கட்டியெழுதித், திருமாலின் முழுமுதற் றன்மையைக் குறைத்துத், தமிழ் நன்மக்களைச் சைவர் வைணவர் என இருவேறு வகுப்பாக்கி, அவ்விருவருந் தத்தந் தெய்வமே தெய்வமெனக் கரைந்து, ஒருவரையொருவர் கைக்கப்பகைத்துப் போராடுதற்கு இடஞ் செய்தவர்கள். அது மட்டுமோ! தமிழர்கள் அத் தமிழ்த் தெய்வங்களைத் தாம் அமைத்த திருக்கோயில்களில் வைத்துத் தாமே வழிபட்டு வந்த முறைகளையும் அவர்கள் அடியோடு மாற்றிவிட்டார்கள்.

முற்காலத்தில் தமிழர்கள் திருக்கோயிலில் உள்ள திருவுருங்களைத் தாமே தொட்டு நீராட்டிப் பூவிட்டு அகில் புகைத்துச் சூடங்கொளுத்தி வழிபட்டு வந்தார்கள். இஞ்ஞான்றும் வடநாட்டிலுள்ளவர்கள் அங்குள்ள திருக்கோயில் களில் தாமே திருவுருவங்களைத் தொட்டு வழிபாடு ஆற்றுதலை நேரே பார்க்கலாம். இக் காலத்தில் இறைவனைத் தொட்டு வழிபாடு ஆற்றுதற்கு உரியவராக ஏற்படுத்தப்பட்டிருக்குந்

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/321&oldid=1592145" இலிருந்து மீள்விக்கப்பட்டது