பக்கம்:மறைமலையம் 29.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

297

தமிழந்தணர்கள் அக் காலத்தில் திருக்கோயில்களை ஒழுங்காக வைத்தற்கும், வணங்க வருவார்க்குக் கூட இருந்து உதவி புரிதற்கும் நிறுத்தப் பட்டவர்களேயல்லாமல் வேறில்லை. ஆரியப் பார்ப்பனர் வந்தபின், இத் தமிழந்தணர் அவருடன் ஆ உறவுகொண்டு, தம்மவர் அல்லாத பிறர் எவரும் இறைவனுருவத்தைந் தொடலாகாதெனக் கட்டுப்பாடுசெய்து, இதற்குமுன் தாம் தமிழிலுள்ள அருட்பாக்களைச் சொல்லி வழிபாடாற்றி வந்த இனிய முறையைக் கைவிட்டு, வடமொழியிலேயே எல்லா வழுத்துரைகளுஞ் சொல்லி ஆரவாரம் புரிவராயினர். தமிழர்கள் வரவரக் கல்வி கேள்விகளிற் குறைந்து, ஆரியப் பார்ப்பனர் மயக்குரைகளில் வீழ்ந்துவிட்டமையின் தமிழர்களாகிய தமக்குரிய திருக்கோயில்களில் ஆரியரும் அவரோ டுறவுகொண்ட தமிழந்தணருஞ் செய்த இச் சூழ்ச்சிகளையும் புரட்டுக்களையும் ரு சிறிதும் அறியாமல், அவற்றிற்கெல்லாம் நடப்பாராயினர்!

இணங்கி

ஈதொன்றோ! ஆரியர் தாம் கொணர்ந்த சிறு தெய்வப் பாட்டுகளாகிய ஆரிய வேதங்களைத் திருக்கோயில்களில் முதற்கண் ஓதல்வேண்டுமெனவும், அவை ஓதி முடிந்தபின்

ஆரியப் பார்ப்பனராகிய தம்மை அனுப்பிவிட்டுப்,

ம்

பின்னர்த்தான் தமிழ் வேதங்கள் ஓதல் வேண்டுமெனவும் ஒரு பொருந்தாக் கட்டுப்பாடும் விரகாகச்செய்துவிட்டாக்ாள். பிறந்து இறந்து உழலுஞ் சிறு தெய்வங்கண்மேல் ஆரியர் பாடின ஆரியவேதப் பாட்டுகளை, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் திருமால் முன்னிலையிற் பாடுதலைப்போற் குற்றமாவது பிறிதில்லை. ஊர் காவற் சேவகர் மேற் பாடிய புகழுரைகளை நாடாளும் அரசன் முன்னிலையிற் கொண்டுபோய்ப் பாடினால், அவ் அரசன் அவற்றைக் கேட்டு மகிழ்வனோ? அவ் அடாத செயலைத் தன் முன்னிலையிற் செய்த குறும்பரைச் சினந்து ஒறுத்துச் சிறையிடுவனல்லனோ? அங்ஙனமே ஆரியச் சிறு தெய்வப் பாட்டுகளை, உலகங்களுக்கெல்லாந் தலைவராகிய அம்மையப்பர் முன்னிலையிற் பாடும் ஆரியரையும் அவர்க்கு இணங்கியொழுகுந் தமிழரையும் இறைவன் ஒறுத்தல்

திண்ணமாமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/322&oldid=1592150" இலிருந்து மீள்விக்கப்பட்டது