பக்கம்:மறைமலையம் 29.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மறைமலையம் 29 -

இப் பரதநாடெங்கணும் உள்ள சிவபிரான் திருமால் திருக்கோயில்களுக்கு வந்திருக்குஞ் சீருஞ் சிறப்புமெல்லாந், தேவாரந் திருவாசகம் ஆழ்வார் பாடல்கள் என்னுந் தெய்வச் செந்தமிழ் மறைகளில் அவை பாடப்பெற்றிருப்பதனால் வந்தனவேயாம். இச் செந்தமிழ மறைகளிற் பாராட்டப்படாத கோயில்களை ள எவருங் காண்டாட மாட்டார். இத் திருக்கோயில்களின் சிறப்புக்கு ஏதுவான இத் தமிழ் மறைகளோ சிவபிரான் திருமாலைத் தவிர வேறு தெய்வங்களைப் பாடுவனவும் அல்ல; இத் தமிழ்மறைச் செம்பாடல்களைக் கேட்டலிலேதான் இறைவனுக்குப் பெருவிருப்பு. இந் நறுந்தமிழ்ப்பாடல்களில் தன் திருவுளம் ஈடுபட்டதனாலன்றோ

த்

இறைவன் மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் நால்வார்க்கும் எளியனாய்த் தோன்றித், தான் ஒருவன் உளன் என்பதை உலகம் எளிதில் அறிந்து உய்யச் செயற்கருஞ் செயல் களெல்லாஞ் செய்தருளினன்?

“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை உண்ட பாலனை அழைத்ததும் எலும்புபெண் உருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்?”

என்று வினாவிய பெரியார், தமிழாலன்றி வடமொழியைக் கொண்டு இறைவன் திருவருட்பேற்றிற்கு உரியரானாரும், இறைவனொருவன் உளனென்பதைப் பல புதுமைகளால் நாட்டினாரும் இல்லையென்பதைத் தெளிவாக அறிவுறுத்து கின்றனர் அல்லரோ? தென்னாடு வடநாடுகளில் உள்ள சிவபிரான் திருமால் திருக்கோயில்களில் ஒன்றையேனுங் குறிப்பிடாத வடமொழி வேதங்களை அத் திருக்கோயில்களில் ஓதுவது குற்றமன்றோ? முழுமுதற் கடவுளாகிய அம்மையப்பரை மட்டும் வழுத்தாமல் எண்ணிறந்த சிறு தெய்வங்களாகிய பேய்களைக் கொண்டாடும் ஆரிய வேதங்களை அம் முழுமுதற் கடவுள் முன்னிலையில் ஓதுதலை விடக் குற்றமான பேதைமைச் செருக்குச் செயல் பிறிதுண்டோ? இறைவன் திருவருளாணை கட கடவாத மெய்யன்பரான நம் முதுதமிழ்ச் சான்றோரின் வழித் தோன்றிய தமிழ்மக்காள் விழித்தெழுமின்கள்! இதுகாறும் ஆரிய மாயத்திற் சிக்குண்டு அறிவு மயங்கித் தூங்கிய பெருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/323&oldid=1592155" இலிருந்து மீள்விக்கப்பட்டது