பக்கம்:மறைமலையம் 29.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

11

ஒருவாறு

வாழ்ந்துவருந் தமிழ் மக்கள் வரலாற்றினை காலங்குறித்து ஆராய்ந்துரைத்தல் சாலுமாகலின் இதனை வரலற்றுக்காலம் என்றுரைத்தாம். இங்ஙனங் காலவரை யறுத்துச் சொல்லுதற்கு ஏலாது இம் மூவாயிர ஆண்டு களுக்கும் முற்பட்ட காலத்தைப் பண்டைக்காலம்' என்று மட்டும் உரைத்தல் பெரிதும் பொருத்த முடைத்தாதல் காண்க. இவ்வாறே ஆரியர்க்குள்ளும் பாரதப் போர்க்கு முற்பட்ட காலம் வேதகாலம் எனப் பெயர் பெறுவதாயிற்று. அது கிடக்க.

6

ஆரிய

இனி, இம் மூவாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டுச் சென்ற பழைய காலத்திலே இருந்த இருபெருஞ் சாதியாரான தமிழர், ஆரியர் என்பாரை நன்காராய்ந்து தங்கருத்து வெளியிடுதல் வரலாற்றுநூல் வல்ல ஆசிரியரெல்லார்க்கும் இன்றியமையாப் பெருங் கடமையாம். இஃதிங்ஙனமாகவும், வரலாற்றுநூல் வல்லாரிற் பெரும்பாலார் மக்களைப்பற்றியே பெரிதாராய்ந்து கூறி ஏனையோரை யாராயாது வைத்து வழுப்பட்ட கருத்துக்களையே மொழிந்து போயினார். தமிழ் மக்கள் வழங்கிய தமிழ்மொழி மிகப் பழையதாதலும், அஃதொரு தனித்த முழுமுதற் சொல்லாதலுந் தேறாத அவர் பிற்றை ஞான்று தோன்றிய சில தமிழ் நூல்களில் வடசொற்கள் வ சில வழங்குதல் பற்றித் தமிழ் வட மொழியினின்று தோன்றிய தாமென்று கூறினார். அதுவேயு மன்றித் தமிழ்மொழியில் உள்ள அரிய பெரிய நூல்களெல்லாம் கி.பி. 11-வது அல்லது 12- வது நூற்றாண்டிலே தாம் இயற்ப்பட்டனவென்றுங் கூறினார். இவர் கூற்றுக்களெல்லாம் நியாயவாராய்ச்சியின்றிக் கூறப் பட்டனவாகலின், அவற்றின் பொய்ம்மை ஈண்டறிவித்தல் வேண்டற்பால தொன்றேயாம். ஒரு மொழி பிறிதொரு மொழியோடு இனமுடைத்தோ அன்றோ என்று அறிதல், அம்மொழிகள் முதன்முதற் றோன்றுங்காற் பிறந்த சொற்களை வைத்து ஒத்துநோக்கு முறையான் மட்டும் பெறப்படுவதாம். மக்கள் தங்கருத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தல் வேண்டி இ ஒலிக் குறிகளே சொற்களென்று கொள்ளப்படும். ஒருவர் மற்றையொருவரொடு பழகப் புகுந்தவிடத்துப் பேசுகின்ற பிறரையுஞ் சுட்டுதற்குச் சொற்கள் வேண்டுவர்; அச்சொற்கள் நான், நாம்; நீ, நீர்; அவன், அவள், அவர், அது, அவை என்பனவாம்; இவை ஒவ்வொரு மொழியினும் முற்பிறந்தனவா

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/36&oldid=1591699" இலிருந்து மீள்விக்கப்பட்டது