பக்கம்:மறைமலையம் 29.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் 29 -

மொழி நாடோறுந் திரிபெய்தி வரும் இயற்கைத்தாமென்க. இவ்வாறு சொற்கள் தோன்றியும் வழங்கியும் மறைந்தும் போதரப் போதரும் மொழி நாகரிக முதிர்ச்சியுடைய மக்கட்குரியதாயின் அதன்கண் அவ்வக் காலத்திருந்த

L

-

அறிவுடையோரால் எழுதப்பட்ட நூல்களில் அச்சொற்கள் கன்மேலெழுத்துப்போற் செதுக்கப்பட்டு நிலைபெறும். அம்மொழி அங்ஙனமன்றி அநாகரிகமுடைய மக்களால் வழங்கப்படுவ தொன்றாயின் அதன்கட் காலந்தோறும் பிறந்த சொற்கள் எல்லாம் ஒருங்கே மறைந்தொழிய அம்மொழியும் நாளடைவில் இறந்தொழியுமென்க. ஒரு காலத்திருந்த மக்கள் ஒரு பொருட்கண் உள்ள ஒரு குணச்சிறப்புப் பற்றி அப்பொருட்கொரு பெயரிட்டு வழங்குவர். அவ்வாறு வழங்கி வருகையில் அப்பெயர் பன்முறையும் வழங்கப்பட்டு வருதலின் அதன் காரணம் மறைந்தது; மறையவே, அச்சொல்லையுந் தமக்கு வேண்டியவாறெல்லாம் திரிவுபடுத்திக் கொண்டு வருதலின் அச்சொல் கடைசியில் வழக்கு வீழ்ந்தொழியப் பின் வருவோர் அச் சொல்லைவிட்டு அப்பொருட்கண் தாம் சிறப்பாய்க் கண்ட குணம்பற்றி வேறு பெயர் தருகுவர். எடுத்துக்காட்டுங்கால், மரக்கொம்புகளை வெட்டுகின்ற கருவிக்குக் கோடரி என்று பெயர் (கோடு - கொம்பு; அரி அரிவது); அதனைப் பன்முறையாலும் வழங்கி வரும் மக்கள் அதன் காரணம்பற்றி மறந்தமையின் அப்பெயரைக் கோடாலி எனத் திரித்து வழங்குகின்றார். இச்சொல் தன் உண்மை வடிவத்துடன் தமிழ் நூல் களிற் காணப்படாதொழியின் அஃதிஞ்ஞான் றிறந்து போயிருக்கு மென்பதிற் றடையென்னை? முன்வழக்கு வீழ்ந்தொழிந்த சொற்களுந் தமிழ் நூல்களிற் பொறிக்கப்பட்டிருத்தலின் பின்வருவோர் அவற்றையும் ஒரோ வொருகா லெடுத்து வழங்குதலுஞ் செய்திடுகின்றார். அங்ஙனம் வழங்குவதுஞ் செய்யுள் வழக்கிற்கே பயன் படுவதன்றி, எல்லா மக்களுக்கும் உரிய உலகவழக்கில் அஃதில்லாமையால் உலகவழக்கிற்கு யாண்டும் புதுச் சொற்கள் வேண்டப்படு மென்றல் ஒருதலையாம். அற்றேல், காலங்கடோறும் பழஞ்சொற்கள் வீழ்ந்தும் புதுச்சொற்கள் தோன்றியும் வருமாயின் மொழியே முன்நிலை கெட்டுப் பின் வேறோர்நிலை எய்துமாலோ வெனின்; அற்றன்று, ஒரு மொழி முதன்முதல் தோன்றிறுங் காலத்துப் பிறந்த பத்துத் தொகுதியிற் சேர்ந்த

L

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/39&oldid=1591702" இலிருந்து மீள்விக்கப்பட்டது