பக்கம்:மறைமலையம் 29.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

6

15

சொற்கள் அனைத்தும் எல்லாரானும் நாடோறும் திரிவின்றி வழங்கப்படும் இன்றியமையா நெறிமையுடைய வாகலின் அச்சொற்கண் மட்டும் வழக்கு வீழ்ந்தழியா வென்பது நடைமுறையில் வைத்துக் கண்டுகொள்க. அம் முதற்பிறவிச் சொற்கள்பற்றியே ஒரு மொழி வழக்கு வீழாது நிலைபெறுமென் றுணர்ந்து கொள்க. இனி அச்சொற்கள் ஒவ்வொன்றும் பிறந்து வழங்கி மறையப் பல நூற்றாண்டுகள் செல்லுமென்றல் பழக்கவறிவுடையா ரெல்லார்க்கும் இனிது புலனாம். பண்டைத் தமிழ்மக்கள் மலைநாடுகளினுங் கடற்கரையோரங்களினும் வாழ்ந்தவரென்பது பின்னே காட்டப்படுமாதலால், அவர் வழங்கிய மொழியில் மலை, க ல் என்னுமிரண்டையுஞ் சுட்டும் பெயர்கள் மிகுதியாகக் காணப்படும். அச்சொற்கள் எல்லாவற்றையும் பழைய தமிழ் நூல்களில் ஆய்ந்து பொறுக்கி, எவ்வெச்சொல் எவ்வெக் காலத்து நூலிற் றோன்றிற்றென்று உறுதிப் படுத்தி அம்முறையால் அச்சொற்களை முன் பின் வைத்துக் கணிப்பின் தமிழ்மொழியின் காலம் இனிது நாட்டப்படும். இங்ஙனங் காலங் கணிக்கும் முறையின் அருமையை நன்குணர்ந்தன்றே மாரிஸ் என்னும் ஆங்கிலவாசிரியர் தாமெழுதிய ங்கிலமொழி வரலாற்றில் இதனைக் கடைப்பிடித்து அதன் காலவளவைச் செவ்வனே குறித்திட்டார். அதுபோலவே, தமிழ்நூல் வல்ல ஆசிரியரும் இம்முறை வழாது ஆராய்ந்து தமிழ் மொழியின் பழஞ்சிறப்பை நிறுவுதற்குப் பெரிதுங் கடமைப்பட்டிருக்கின்றார். இக்கட்டுரையில் எம்மால் அங்ஙனங் காலஉறுதி செய்வதற்குக் கூடாதாயினும். ஒரு பொருளைச் சுட்டுதற்குப் பல சொற்கள் காணப்படும் அத்துணையே பற்றித் தமிழ்மொழி மிகப் பழைய மொழியா மென்று கூறுதல் குற்றமாமாறில்லை யென்க. அது கிடக்க.

இனிச், சொல்வழக்கானே யன்றிச் சொல்லுச்சரிப்பு முறையானுந் தமிழ் மிகப் பழையதொன்றாதல் காட்டப்படும். தமிழில் வழங்கும் எல்லாச் சொற்கள் முதலினும் ட், ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னும் எட்டெழுத்துக்கள் நில்லாவென லக்கண நூல்களில் ஒரு விதி காணப்படுதல் சிறிதிலக்கண அறிவுடையாரும் அறிவர். டமருகம், ரகு, ராமன், லம்பகம் முதலியனவாக ஆரிய மொழிச்சொற்கள் அவ்வெழுத்துக்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/40&oldid=1591703" இலிருந்து மீள்விக்கப்பட்டது