பக்கம்:மறைமலையம் 29.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

19

னி, எந்த நாட்டில் தொன்றுதொட்டுக் கற்றோர் மிகுதியாய்ப் பல்கி வருவரோ அந்த நாடு வளம் பெருகும்; அதன்கண் உள்ளார் எல்லாரும் கல்வி மணம் பெற்று அறிவு விளக்கமுடையராவர்; அவர் வழங்கும் மொழி மிகுந்த சிறப்புடையதாய் நிலைபெறும். தமிழ்நாட்டிற் பண்டைக் காலத்துக் கற்றறிவுடைய சான்றோர் கணக்கின்றி யிருந்தா ரென்பதற்கு அவர்களால் திருவாய்மலர்ந்தருளப்பட்ட அளவிறந்த நூல்களும், அளவிறந்த பாட்டுக்களுமே சான்றாம். புறநானூறு முதலான பழைய சங்கத் தொகைநூல்களைக் காண்பேமாயின், அவற்றிற் பெறுதற்கரிய முழுமணி போன்ற அரிய பெரிய செய்யுட்களை இயற்றியருளிய அப்பெருந்தகை யாளர் பேரறிவும் பெருந்தொகையும் பெரிதும் வியக்கற் பாலனவா யிருக்கின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னே நமது செந்தமிழ்மொழி எவ்வளவு திருத்தமாக வழங்கப் பட்டுலாவியது! அந்நாட்களிலிருந்த கற்றோர் நுண்ணறிவு எவ்வளவு தெளிவாக அவரியற்றிய பாக்களிலே துளும்பி ஒளி வீசுகின்றது! அப்போதிருந்த நன்மக்களெல்லாரும் எவ்வளவு இன்புற்று வாழ்ந்தனர்கள்! என்று நினைக்க நினைக்க எம் உள்ளம் வரைகடந்த இன்பத்தாற் பொங்குகின்றது. அக்காலத்தில் எழுதப்பட்ட தெய்வத் திருக்குறளுக்கு இணையான நூல் இவ்வுலகத்தில் உண்டோ? அஃது உயர்வு ஒப்பில்லா உவரா அமிழ்தமன்றோ! உள்ளன உள்ளபடி கூறிய முழுக்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை என்பவற்றின்முன் தலையெடுத்து நிற்கும் வேறு காப்பியங்கள் இவ்வுலகில் எந்த மொழியிலேனும் உளவா? இல்லையே! மக்கள் மெய்யுணர்வின் இயற்கையினைப் பகுத்து விளக்கிய இறையனாரகப் பொருளுரை போன்ற நூல் இவ் விரிகடலுலகினும் இல்லையே. கலித்தொகையிலுள்ள இயற்கைப் பொருள் நுட்பமும், பலதிறப்பட்ட மக்கள் வழக் ஒழுக்க ஆராய்ச்சியும் வேறு எம்மொழி நூலிலாயினும் உள்ளனவா? மனு முதலிய அறநூல்களெல்லாம் நாலடியாரை ஒக்குமோ? ஆ! அக்காலத்துத் தோன்றிய திருச்சிறப்பம்பலக் கோவையார் என்னும் அவ்வொரு நூலை நோக்கினும் தமிழ்மொழியின் அமைதியும் சிறப்பும் இனிது புலப்படுமே. நண்பர்காள்! இங்ஙனஞ் சீர்திருத்தமுற்று நிலாவிய

ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/44&oldid=1591707" இலிருந்து மீள்விக்கப்பட்டது