பக்கம்:மறைமலையம் 29.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் - 29

இந்நூல்களுக்கெல்லாம்

மிக

இச்செந்தமிழை வழங்கிய மக்கள் எத்துணை நாகரிகமுடையரா யிருந்தனராவர்! இனி முற்பட்ட தொல்காப்பிய நூற்பெருமையைச் சிறிது ஆராய்ந்திடுவே மாயின் தமிழர் வரலாற்றுக் காலத்திற்கு முன்னும் மிக்க நாகரிகம் பெற்று வாழ்ந்தாரெனல் தெற்றென விளங்குகின்றது. தொல்காப்பியம் முற்கூறிய தமிழ்நூல்கள் எல்லாவற்றிற்கும் முன்றோன்றிய தாதலை ஒரு சிறிது ஆராய்வாம். இது வடமொழியிற் பாணினி முனிவர் இயற்றிய அட்டாத்தியாயி என்னும் அரிய பெரிய இலக்கண நூலுக்கும் முந்தியதென்று நாட்டவே, இதன் காலம் அத் தமிழ் நூல்களுக்கெல்லாம் முற்பட்டதாதலும் நன்கு பெறப்படும். ஆகலின் முதலிற் பாணினி முனிவர் காலம் ஈண்டுச் சுருங்க வகுப்பாம். பாணினி முனிவர் குப்பாம்.பாணினி தாமியற்றிய அவ்விலக்கண நூலில் இவ்விந்திய நாட்டின்கண் உள்ள இடங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி அவற்றின் பெயர்க் கெல்லாம் இலக்கணம் வகுத்துரைக்கின்றார். பெரும்பாலும் அவராற் குறிக்கப்பட்ட நாடு நகரங்களெல்லாம் பஞ்சாப் நாட்டிலும் அப்கானித்தானத்திலும் இருக்கின்றன. இந்தியாவில் தெற்குப் பக்கங்களில் அவராற் குறிக்கப்பட்ட இடங்கள் கச்ச, அவந்தி' கோசல, கரூச, கலிங்க முதலியன வாம். இவை யெல்லாம் விந்தியமலைக்கு வடக்கேயுள்ளன. விந்திய மலைக்குத் தெற்கே உள்ள நாடு நகரங்களில் ஒன்றாயினும் அவராற் குறிக்கப்படவில்லை. ஆகவே, பாணினி முனிவர் காலத்து ஆரியமக்கள் விந்தியமலைக்கு வடக்கே உள்ள நாடுகளில் இருந்தாரென்பதும், அம் மலையைக் கடந்து இப்பகுதி வந்திலரென்பதும் இனிது பெறப்படுவனாம்.

2

4

5

இனிப், பாணினீ யத்திற்கு வார்த்திகை உரை எழுதிய காத்தியாயனார் விந்தியமலைக்குத் தெற்கே தற்கே உள்ள நாடு நகரங்களைக் குறிப்பிடுகின்றார். ஓர் இடத்தின் பெயர்பற்றி அவ்விடத்திற் பிறந்த மக்கட்குப் பெயர் வருமாற்றைச் சுட்டிப் பாணினிமுனிவர் விதி கூறிப் பஞ்சாலத்தில் தோன்றினவன் பாஞ்சாலன், சால்வத்திற் றோன்றினவன் சால்வேயன் என்பனவாக எடுத்துக்காட்டினார். 'ஈண்டு இச்சூத்திரத்தில் வேறு சில விடப்பட்டன' என்றுரைத்துக் காத்தியாயனர் "பாண்டியன் எனுஞ்சொற் பாணினியாற் சொல்லப்பட

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/45&oldid=1591708" இலிருந்து மீள்விக்கப்பட்டது