பக்கம்:மறைமலையம் 29.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

21

வில்லை; பாண்டு குடியில் அல்லது பாண்டு நாட்டிற் பிறந்தோன் ‘பாண்டியன்' எனப்படுவான்” என்று புதிய ஓர் உரைவாக்கிய முஞ் சேர்த்தெழுதினார். இன்னும் இவ்வாறே 'சோழர்’ மகிஷ்மத்' என்னுஞ் சொற்களும் அக் காத்தியாயனரால் ஆராய்ந்துரைக்கப் பட்டன.

இனிப், பாணினீயத்திற்கு மாபாடிய முரைத்த பதஞ்சலியார் ‘மாகிஷ்மதீ’ ‘வைதர்ப்ப’ ‘காஞ்சீபுர’ ‘கேரள’ முதலியவற்றையும் ஆராய்ந்து உரையுரைத்தார். அதுவேயு மன்றித் தம்முரையுட் காத்தியாயனர் வார்த்திகவுரை பாட பேதங்கள் பல உளவாதலும் எடுத்துக் காட்டினார். காத்தியாயனர்உரை பல பாடபேதங்கள் உடைத்தாய்த் திரிபெய்துதற்குப் பல நூற்றாண்டுகள் செல்லுமாகலின், அப் பாடபேதங்களைத் தம்முரையுட் குறித்த ஆசிரியர் பதஞ்சலி

அக்

யார்க்கு முந்நூறு நானூறு ஆண்டுகளின்முன் காத்தியாயனர் இருந்தாராகற்பாலார். மற்றுப் பதஞ்சலியார் இற்றைக்கு இரண்டாயிரத்து ஐம்பத்தாறு ஆண்டுகளின் முன் இருந்தாரென வடநூல் வரலாற்று அறிஞர்கள் நிறுவினா ராகலின், காத்தியாயனர் காலம் 2350 ஆண்டுகளின் முற்பட்ட தென்பது பெற்றாம்.

இனிப் பாணினி முனிவராற் சொல்லப்படாத புதிய இலக்கண விதிகள் சில காத்தியாயனராற் சொல்லப் பட்டிருப்பது கொண்டு, அவ்விதிகள் பெறுதற்குரிய சொல் வழக்குகள் சில பாணினி முனிவர் காலத்திலில்லை என்பதூஉம், அவை காத்தியாயனர் காலத்தே தான் தோன்றின என்பதூஉம் பெறப்படுகின்றன. அதுவேயு மன்றிப் பாணினி முனிவர் காலத்து நடைபெற்ற சொற்கள் பல காத்தியாயனர் காலத்து வழக்கு வீழ்ந்தொழிந்தன. இங்ஙனம் மொழி திரிபெய்துதற்குப் பல நூற்றாண்டுகள் செல்லுமாகலின் பாணினி முனிவர்க்கும் காத்தியாயனர்க்கும் இடையில் விரிந்த காலம் நானூறு ஆண்டிற்குக் குறையாதாகும். எனவே, பாணினி முனிவர் இற்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முன்னிருந்தா ரென்பது இனிது பெறப்படும்.

இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொல்லிலக்கணங் களெல்லாம் முற்றவுங் கூறினா ராயினும், அச்சொற்கள் எவ்வாறு பிறந்தன என்று ஆய்ந்து

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/46&oldid=1591709" இலிருந்து மீள்விக்கப்பட்டது