பக்கம்:மறைமலையம் 29.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

L

-

❖ மறைமலையம் – 29

அவைதம்மை யெல்லாம் பகுத்துப் பகுதிகளாக அடக்கிக் காட்டினாரில்லை. அங்ஙனமாயினும், ஒவ்வொரு சொல்லுங் காரணம் பற்றியே தோன்றினவென்றும், அக் காரணம் அறிவுடையார்க்கல்லது ஏனையோர்க்கு விளங்கத் தோன்றா வென்றும் குறிப்பிட்டு “மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” என்று சூத்திரஞ் செய்தருளினார். இவ்வாற்றால் தமிழ்ச்சொற்களைப் பகுதி, விகுதி முதலியனவாகப் பகுத்து ஆராய்ந்துரைக்கும் முறை தொல்காப்பியனார் நூலெழுதிய ஞான்று தமிழாசிரியர்க்குத் தெரியாதிருந்த தென்றே ணியப்படும். மற்றுப் பாணினி முனிவர் தாமியற்றிய அட்டாத்தியாயியில் தங்காலத்து வழங்கிய பல்லாயிரம் ஆரிய மொழிகளை யெல்லாம் பகுதி விகுதிகளாகப் பகுத்தாராய்ந்து அவற்றை யெல்லாம் தாதுபாதத்திற் சில்லாயிரம் பகுதிகளிலே அடக்கினார். தொல்காப்பியனார் பாணினி முனிவர் காலத்தி லேனும், அல்லது அதற்குப் பின்னேனும் இருந்தனராயின் இலக்கண ஆராய்ச்சிக்கு இன்றியமையாப் பெருஞ் சிறப்னிதான சொல்வரலாற்று முறையைத் தவறாது கூறியிருப்பர். பாணினி முனிவர்க்குப் பிற்பட்ட காலத்திலிருந்தவரான பவணந்தியார் இச்சொல் வரலாற்று முறையைத் தமது நன்னூலில் தழுவிக் கூறினமை அறியவல்லார்க்கு யாம் உரைத்தது மிகவும் பொருத்த முடைத்தாதல் இனிது விளங்கும். ஆகவே, சொல்வரலாற்று முறை தெரிந்துரைத்த பாணினி முனிவர்க்கும், அம்முறை தங்காலத் தில்லாமையால் அதனை உரையாது விடுத்த மிகப்

L

இடைப்பட்ட காலம்

தொல்காப்பியனார்க்கும் பெரிதாதல் வேண்டும். பாணினி முனிவர்க்கு நானூறு ஆண்டு களின் முன்னே ஆசிரியர் தொல்காப்பியனார் இருந்தனர் என்று கொள்ளும்வழி, இற்றைக்கு மூவாயிரத்திருநூறு ஆண்டுகளுக்குமுன் அவ்வாசிரியர் காலம் கணிக்கப்படுமென்று

காள்க.

கடல்

இனி, மற்றுமொரு வாற்றால் தொல்காப்பியனார் காலம் ஆயும்வழி அது நாலாயிர ஆண்டுகளுக்கும் முற்பட்டதென்று நாட்டப்படும். தொல்காப்பியம் பஃறுளியாறு கொள்ளப்படுமுன் எழுதப்பட்டது; அக்காலத்திற் குமரியாறு தென்றிசையில் ஓடிக் கொண்டிருந்தது. இது “வடவேங்கடந் தென்குமரி” என்னும் பனம்பாரனார் பாயிரவுரையானும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/47&oldid=1591710" இலிருந்து மீள்விக்கப்பட்டது