பக்கம்:மறைமலையம் 29.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

25

ன்

துகாதீர் எனவும், டியூடானிகில் தொஹ்தர் எனவும், சிலாவிகில் துஸ்தெர் எனவும் வழங்குகின்றது. ஆரியத்தில் உடன் பிறந்தானைக் குறிக்கும் ப்ராதர் என்பது, இலாவிகில் ப்ரதுரு எனவும் ஸெண்டில் ப்ராதர் எனவும், கிரீக்கில்ப்ராதீ எனவும், 6 லத்தீனில் வ்ராதெர் எனவும், டியூடானிகில் ப்ரோதர் எனவும், ஸெல்டிகில் ப்ராதிர் எனவும் வழங்குகின்றது. ரியத்தில்மாட்டைக் குறிக்கும் பசூ என்னுஞ் சொல், ஸெண்டில் பசு எனவும், இலத்தீனில் பிகஸ் எனவும்,டியூடானிகில் வைஹு எனவும், சிலாவிகில் பிகு எனவும் வழங்குகின்றது. ஆரியத்தில் ஆட்டைக்குறிக்கும் ஆவி எனுஞ்சொல், கிரீக்கில் ஓயீஸ் எனவும், இலத்தீனில் ஓவிஸ் எனவும், டியூடானிகில் அவி எனவும், சிலாவிகில் ஓவிகா எனவும், ஸெல்டிகில் ஓய் எனவும் வழங்குகின்றது. ஆரியத்தில் பாம்பைக் குறிக்கும் அகி என்பது, ஸெண்டில் அஷி எனவும், கிரீக்கில் எகிஸ் எனவும், இலத்தீனில் அங்குயிஸ் எனவும், டியூடானிகில் அங்க் எனவும், சிலாவிகில் அங்கீஸ் எனவும் வழங்குகின்றது. இன்னும் வ்வாறே வருவனவெல்லாம் காட்டப்புகின் இச் சொற்பொழிவு வரம்பின்றி மிக விரியுமென அஞ்சி இத்துணையே ஈண்டைக்குப் போதுமென நிறுத்துகின்றோம். இக் காட்டிய வாற்றால் ஆரியமொழி ஸெண்ட், கிரீக்கு, இலத்தீன் முதலான மொழிகளோடு ஒற்றுமையுடைத்தாதல் நன்கு தெளியப்படும். இனி ஆரியத்தில் வழங்கும் சூநு, துகிதார், ப்ராதர், பசூ, ஆவி, அகி என்னும் அச்சொற்களுக்குத், தமிழில் முறையே மகன், மகள், உடன்பிறந்தான், மாடு, ஆடு, பாம்பு என வழங்குஞ் சொற்கள் ஒருவாற்றாலும் உரு வொப்புமை பெறாது நிற்றலும் ஈண்டு அறியற்பாலதாம்.

இனிக், கிரேக்கர், உரோமர், ஆங்கிலர், ஆரியர் முதலான ஆரிய சாதியார் ஆரியர் இந்திய நாட்டிற் புகுமுன்னே ஓசைகள் பிறக்கும்முறை அறிந்து எழுத்துக்களை முன்பின்னாக நிறுத்தின ராயின் அம்முறை அவ்வாரிய மொழிகள் எல்லாவற்றிலுங் காணக் கிடக்கும். மற்று அம்முறை அவ்வாரிய மொழிகளிற் காணப்படாமல் அகரத்தின்முன் பகரமும் அதன்பின் சகரமுமாக இங்ஙனம் ஒருமுறையுமின்றி நிறுத்தப்பட்டுக் கிடத்தலால், ஆரியர் அம்முறை முன் அறியாராய் இந்தியாவிற் புகுந்தபின் அறிந்தாரென்பது இனிது நாட்டப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/50&oldid=1591713" இலிருந்து மீள்விக்கப்பட்டது