பக்கம்:மறைமலையம் 29.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

1

27

நிலைமாறி இருக்குவேதத்துள் வழங்கப்படுவதாயிற்று. தமக்கு எதிரே நாகரிகம் நிரம்பி விளங்குகின்ற தமிழ அரசரைத் தமக்குந் தலைவராக ஒருப்பட்டுப் பண்டை ஆரியமக்கள் அசுரர் என வழங்கினார். பிற்காலத்து வடமொழியில் மட்டும் ‘அசுரர்’ என்னும் அச்சொல்லின் உயர்ச்சிப்பொருளை மாற்றி அதற்கு அரக்கரெனப் ாருள் கட்டிவிட்டார்கள். மற்று இருக்குவேதமோ அரசியல்நெறி திறம்பாத தமிழரசரைச் சுட்டி அசுரர்’ என மிகவும் பாராட்டி வழங்கியது. இத்தமிழரசர் தங்கீழ் வாழ்வார்க்கெல்லாம் மிக இனியராய் ஒழுகியதுபற்றி, இவர்க்கும் இவர் குடும்பத்தார்க்கும் அரசினியர் என்னும் பெயர் வழங்குவதாயிற்று. 'அரசினியர்' என்னும் இச்சொற் றொடரையே இருக்குவேத காலத்து ஆரியமக்கள் 'ராஜந்யர்’ எனத் தமக்கேற்றவாறு திரித்து வழங்கினார். அரசினியார் எனப்படும் பண்டைக்காலத் தமிழரசர் நுண்ணறிவு

நூலுணர்ச்சியாற் றத்துவங்கள் பலவும் ஆய்ந்து முடி பொருட் டேர்ச்சியுற்று விளங்கினாரென்பதூஉம் அப்பழைய ஆரிய நூலாற் பெறப்படும் உண்மையாம். இதனைப் பின்னே விரித்து விளக்குவாம்.

னி இதுவேயுமன்றித் தமிழ் மக்கள் தாம் உரையாடுங் காற் றோன்றும் ஓசைகளைப் பல்வகை எழுத்துக் களால் இட்டெழுதிப் பண்டே நாகரிக முதிர்ச்சி உடையராயு மிருந்தனர். ஆரியரோ தம்பாற் பிறந்த ஓசைகளை எழுத்திலிட்டுக் காட்டும் வகை அறியாமையினால், தம் முன்னோராற் பாடப்பட்ட பாட்டுக்களை நெட்டுருப் பண்ணுதற்குக் கிடைகூட்டிப் பயின்று வந்தார். அவ்வழக்கம் இன்றும் பலர் ஒருங்கு கூடியிருந்து வேதம் ஓதுமாற்றால் நன்கு அறியப்படும். ங்ஙனம் எழுத்துக்களின்றி வெறும் ஓசை மாத்திரையாய் வேதங்கள் அவராற் பயிலப்பட்டு வந்தமையாலன்றே அவை ‘எழுதாக்கிளவி' என்று பெயர் பெறுவனவாயின. அல்லதூஉம், வடமொழிக்கென்றே ஓரெழுத்து இல்லாமை யினாலேதான், வடநாடுகளிலுள்ளார் மகாராட்டிரத் திற்குரிய தேவ நாகர எழுத்துக்களானும், தென்னாடு களிலுள்ளார் தமிழுக்குரிய கிரந்தாக்கரங்களாலும், ஆந்திர நாட்டிலுள்ளார் தெலுங்கிற் குரிய தெலுங்கெழுத்துக் களானும் வடநூல்களை எழுதுதலும் பதிப்பித்தலுஞ் செய்து போதருகின்றார். பண்டை நாள் ஆரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/52&oldid=1591715" இலிருந்து மீள்விக்கப்பட்டது