பக்கம்:மறைமலையம் 29.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் -29 -

எழுத்தறியாமையின் தம்முடைய பழைய நூல்களைப் பாதுகாத்து வழங்கற் பொருட்டுத் திருத்தமாக அவற்றை ஓதுதற் குரிய முறைகளை எல்லாம் பிராதிசாக்கியங்களில் மிகவிரித்தெழுதினார்.

எழுத்தறிந்தனராயின் அவ்வா

றெல்லாம் அவற்றை ஓதுதற்குரிய முறைகளை மிகவருந்தி விரித்தெழுதல் வேண்டப்படாதென்க. நினைக்கப்படுவது என்னும் பொருளை யுடைய ஸ்மிருதி என்னுஞ் சொல்லும் கேட்கப்படுவது என்னும் பொருளை யுடைய சுருதி என்னுஞ் சொல்லும் அவ்வடநூல்களுக்குப் பெயராய் அமைந்ததனை உற்றுநோக்கு மிடத்து அவை நினைக்கப்பட்டுங் கேட்கப் பட்டும் வந்தனவே யல்லது எழுத்திலிட்டு எழுதப்படவில்லை யென்பது போதரும்.

நா

இனி ஆரியர் இந்தியாவிற் புகுந்தபின் தமிழருடைய கரிக முதிர்ச்சியினையும், அவர் தாங் கருதிய பொருளை எழுத்திலிட்டுப் பொறித்தலுங்கண்டு தாமும் தம்முடைய பாட்டுக்களைப் பண் அடைவுபட வகுத்த ஞான்று எழுதுமுறை கண்டறிந்தார். இது கோல்ட் ஸ்டக்கர் என்னும் பண்டிதர் விளக்குமாற்றானும் நன்கு அறியப்படும். இரைஸ்டேவிட்ஸ் பண்டிதரும் 'இந்தியாவிலுள்ள எழுத்துக்கள் ஆரியர்க்குரிய வல்ல' வென்றும், ன்றும், 'அ அவை திராவிட வியாபாரிகளாற் கொண்டுவந்து தரப்பட்டன' வென்றும் கூறுமாற்றானும்' அவை தமிழர்க்கே உரியவென்பது இனிது பெறப்படும்.

இனி, வரலாற்று நூல் அறிஞரில் ஒருசாரார் பினீ சியரென்னும் நாகரிக சாதியாரோடு வாணிகம் நடாத்திய தமிழர் அவரிடமிருந்து எழுதுமுறை கற்றுப் பின் அதனை இந்தியாவெங்கும் பரப்பினார் எனக் கூறுகின்றார். இவருரைக்கும் இவ்வுரையோடு யாம் ஒரு வாற்றால் இணங்கு தலும் பிறிதொரு வாற்றால் இணங்காமையும் உடையேம். யாங்ஙனமெனிற் காட்டுதும்:

இற்றைக்கு மூவாயிர ஆண்டுகளின் முன் மேற்றிசை யிலுள்ள பினீசியர் என்னும் வகுப்பார் தென்னிந்தியாவின் மேற்கே மலையாளக் கரையினும், கிழக்கே உவரி, கொற்கை என்னுங் கடற்றுறைப் பட்டினங்களினும் வந்திறங்கித் தமிழரோடு வாணிகம் நடாத்தினார். அவர் தம் நாட்டுக்குத் திரும்பிப்போம் போது யானைக் கொம்புகள், தோகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/53&oldid=1591716" இலிருந்து மீள்விக்கப்பட்டது