பக்கம்:மறைமலையம் 29.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

29

மயில்கள், குரங்குகள், சந்தனக் கட்டைகள், விலை உயர்ந்த முத்துகள், அரிசி, கருவாப்பட்டை முதலிய சரக்குகளை ஏற்றிக் கொண்டுபோயினார். அவர்கள் சாலமன் என்னும் மேல் நாட்டரசன் காலத்திற் கூட்டங் கூட்டமாய் வந்தனரென்று ஈபுருமொழியில் எழுதப்பட்ட விவிலிய நூலால் நன்கறி கின்றோம். அந்நூலில் தமிழ்நாட்டுக் கடற்றுறைப் பட்டினமான உவரி என்பது ஓயிர் எனவும், அவர் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றிக் கொண்டுபோன பொருள்களான, மயில், சந்தனம், அரிசி என்பவற்றின் பெயர்கள் தோகை, அனுகம், அரிசி எனவும் அவ்விவிலிய நூலில் எழுதப்பட்டிருக்கின்றன.3 சாலமன் என்னும் வேந்தன் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளின் முன் செங்கோலோச்சினா னென்பது வரலாற்று நூல் அறிஞர்க் கெல்லாம் ஒப்பமுடிந்தமையின், அவன் காலத்தில் தமிழ்நாடு போந்து தமிழரோடு வாணிகம் நடாத்திய பினீசியர் தாம் பயன் படுத்திவந்த எழுது முறையைத் தமிழர்க்குங் கற்பித்தார். ஆயின், தமிழர் அவர் வருதற்குமுன் எழுதுமுறை அறியாரோ வெனின்; அற்றன்று. பினீசியர் வருதற்கு முன்னுந் தமிழர் அம்முறை நன்கறிந்தார் என்பது தேற்றமாம். யாங்ஙனமெனிற் காட்டுதும்: ஆசிரியர் தொல்காப்பியனார் ‘எழுத்ததிகாரம்' என ஒன்று வகுத்துக்கொண்டு எழுத்துக்களின் இலக்கணத்தைச் செவ்வனே கூறுகின்றமை யானும், எழுத்துக்கள் இல்லாவிடின் அங்ஙன மெல்லாம் இலக்கணங் கூறுதல் ஆகாமையானும் “உட்பெறு புள்ளி யுருவா கும்மே” என்னுஞ் சூத்திரத்தில் மகர எழுத்து முன் நாளில் எழுதப்பட்ட வரிவடிவும், “மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல்” என்னுஞ் சூத்திரத்தில் மெய்யெழுத்துக்கள் புள்ளி பெற்று நிற்றலும் “எகர ஒகரத் தியற்கையுமற்றே” என்பதனால் எகர ஒகர எழுத்துக்களும் அவ்வாறே பண்டை நாளில் புள்ளி பெற்று நின்றமையும் “புள்ளியில்லா எல்லா மெய்யும், உருவுரு வாகி அகரமொடு உயிர்த்தலும், ஏனை உயிரோடு உருவுதிரிந்து உயிர்த்தலும், ஆயீரியல உயிர்த்தலாறே" என்பதன்கண் மெய்யெழுத்துக்கள் உயிர்களோடு கூடியவழி வரிவடிவில் உருவு திரிதலும் இனிதெடுத்து ஓதினாராகலானும், உரையாசிரியர் நச்சினார்க் கினியர் “உருவுதிரிந் துயிர்த்தலாவது மேலுங் கீழும் விலங்கு பெற்றுங் கோடுபெற்றும் புள்ளி பெற்றும் புள்ளியுங்கோடும் உடன்பெற்றும் உயிர்த்தலாம். கி.கீ முதலியன மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/54&oldid=1591717" இலிருந்து மீள்விக்கப்பட்டது