பக்கம்:மறைமலையம் 29.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

-

மறைமலையம் -29

விலங்குபெற்றன. கு கூ முதலியன கீழ் விலங்கு பெற்றன. கெ கே முதலியன கோடுபெற்றன. கா ஙா முதலியன புள்ளிபெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினார். கொ கோ ஙொ ஙோ முதலியன புள்ளியுங் கோடும் உடன்பெற்றன” என்று உரை விரித்துக் கூறுதலானும் தமிழர் தமக்கென வேறெழுத் துடையரா யிருந்தன ரென்பது துணிபொருளாம்.

அற்றேல், பினீசியரால் தரப்பட்ட எழுத்துக் களுக்கும் தமிழர்க்கே உரிய எழுத்துக்களுக்கும் வேறுபாடு என்னை எனின்; - பினீசியர்க்குரிய எழுத்துக்களெல்லாம் வலதுகைப் புறத்திலிருந்து இடதுகைப்பக்கமாய் எழுதப்படுவனவாம்;' தமிழர்க்குரியனவோ இடதுகைப் புறத்திருந்து வலது பக்கமாய் எழுதப்படுவனவாம். இவ்வேறு பாட்டுடன், அவர் கொண்டு வந்தன உருவத்தானும் தமிழ் எழுத்துக்களின் வேறாவனவாம். எகுபதி நாட்டில் எழுப்பிய தூபிகளின் மேற் பொறிக்கப் பட்டிருக்கும் சித்திர எழுத்துக்களினின்றுந் திரித்துச் செய்து கொண்டனதாம் பினீசியர்க் குரிய எழுத்துக்கள்; மற்றுத் தமிழ் எழுத்துக்களோ வெனின், அக்கடியர் என்னுஞ் சாதியார் பல்லாயிர மாண்டுகளின் முன்னே வழங்கிய முளை எழுத்துக்2 களினின்றுந் தோன்றி நடைபெறுவனவாம். அக்கடியர் என்னுஞ் சாதியாரும் பண்டைக்காலத் தமிழரும ஒருவரே யென்பது திருவாளர் பண்டிதர் சவரிராயரவர் களாற் 'சித்தாந்ததீபிகை'யில் இனிது விளக்கப்பட்டது; அதன் விரிவு பின்னே காட்டுதும்.

னிப், பௌத்த சமயம் விளக்கிய அசோக மன்னன் காலத்திற் செதுக்கப்பட்ட கல்வெட்டெழுத்துக்கள் இருவகைப் படுகின்றன. ஒன்று வலதுபுறத்திருந்து இடது பக்கமாகவும், ஒன்று இடதுபுறத்திருந்து வலதுபக்கமாயும் எழுதப்பட்டிருக் கின்றன'. முன்னையது கபுர்த்தகிரிச் சிலாசாதனங்களிற் காணப் படுகின்றது; இது வட அசோகலிபி என்று சொல்லப்படும். பின்னையது அசோக வேந்தன் கல்வெட்டுக்கள் பெரும்பால வற்றிலுங் காணப்படுகின்றது; இது தென் அசோகலிபி என்று சொல்லப்படும். வட அசோகலிபி இந்தியாவின் வடமேற்குப் பாகங்களில் மட்டும் அருகி வழங்குகின்றது. தென் அசோகலிபி இந்தியாவிற் பெரும்பாலும் எங்கும் வழங்குகின்றது. ஆகையால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/55&oldid=1591718" இலிருந்து மீள்விக்கப்பட்டது