பக்கம்:மறைமலையம் 29.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

  • மறைமலையம் - 29

என்று திருவிளையாடற் புராண முடையாருங் கூறினார்.

செந்தமிழ் நண்பர்காள்! இற்றைக்கு நாலாயிரத்து முந்நூறு ஆண்டுகளின் முன்னரே தமிழ்மக்களும் தமிழ் இலக்கண ஆசிரியரும் உயர்திணை அஃறிணைப் பாகுபாடு பாருள் வகையால் இயற்கைநெறி திறம்பாதே உணர்ந்து அறிவுடையார் எல்லார்க்கும் ஒப்ப முடிவதாக விளக்கிய அரிய நுண்ணறிவாற்றல் நுங்களாற் பெரிதும் போற்றற்பாலதேயாம். இன்னொரன்ன வற்றை இதுகாறும் பொதுவாக நினைத்து வந்தது போல் நினையன்மின்! பண்டைத் தமிழ் நூல்களிற் சொல்லப்பட்ட ஒவ்வொரு பொருளும் கிடைத்தற்கரிய முழுமாணிக்கங்களாமென்று தேர்மின்கள்! இவ்வரும் பெறல் மாணிக்கங்களெல்லாம் வரன்முறையே தொகுத்த தொல்காப்பியம் விலை வரம்பு அறியாக் களஞ்சியம் என்று ஆராய்ந்து வியப்பெய்துமின்கள்!

இனி, நீர் வேட்டுச் செல்கின்றான் ஒருவன் நறுமணங் கமழும் இளமரக்காவின் இடையிடையே தங்கி அயர்வு சிறிது ஒழிந்து முப்பழச் சாறுந் தேனும் விரசினாற்போற் சுவைக்கும் த ண்ணீர் நிரம்பிய நீர் நிலையிற் சென்று நீர் ஆரப்பருகி வேட்கையொழிந்து அயர்வு முற்றும் நீங்கினாற்போல, ஆசிரியர் தொல்காப்பியனார் திருவாய்மலர்ந்தருளிய எழுத்ததி கார சொல்லதிகாரங்களினிடையே தங்கித் தமிழ்ப்பெருமை தெரியா அறியாமை சிறிது சிறிதே ஒழிந்து இப்போது பொருளதிகாரத்திற் சென்று ஆண்டுவிரிந்த நுண்பொருட் டொகுதியில் ஒன்றிரண்டு நுகர்ந்து எமதறியாமை முற்றும் போக்குவாம். நண்பர்காள்! ஆசிரியர் பொருளை அகம், புறம் எனப் பகுத்த முறையே பெரிதும் நுண்ணறிவு நிறைந்ததாம். உயிர்களின் அறிவு நிகழ்ச்சியே அகம், புறம் இருதிறப்படுகின்றன. உயிரினுள் நிகழும் அறிவு அவ்வுயிர்க்கே புலனாவதாம். உயிர்க்கு ஓர் உடல் படைக்கப்படா முன்னெல்லாம் அதன் அறிவு புலப்பட்டு நிகழாதாய்ச் செயலின்றி மழுங்கிக் கிடந்தது. இனி அவ்வறிவு அங்ஙனம் மழுங்கிக்கிடக்க வொட்டாது அதனை எழுப்பி விரிவு செய்தற்பொருட்டு அதற்கோர் உடல்தரப்பட்டதாகலின், உயிர் உள்ளறிவு புறப்பொருளோடு இயைந்து நின்று அம்முறையே பெருகுதற்கு இவ்வுடம்பு இடைநின் றுதவுவதொன்றாம்.

டு

என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/59&oldid=1591722" இலிருந்து மீள்விக்கப்பட்டது