பக்கம்:மறைமலையம் 29.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

35

இதனால், அகம், நடு, புறம் என்னும் மூவகைப் பெறப்படு கின் றன. அகம் அறிவு, நடு உடம்பு, புறம் பொருள் என ஆகும். கண் ஒருபொருளைக் காண்டற்கு ஞாயிறு விளக்கமாய் இடைநின்று காட்டுதல்போல உயிரறிவு புறப்பொருளைப் பற்றுதற்கு உடம்பு ஒரு விளக்காமென்க. இதுபற்றியே மெய்கண்டதேவர் மாயா தனுவிளக்கா மற்றுள்ளங் காணாதேல், ஆயாதா மொன்றை” என்றருளிச் செய்தார். இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருட்குணமும் நுட்பவடிவமாய் இவ்வுடம்பிற் பொருந்திக் கிடக்கின்றன; இவற்றோடு வேற்ற ஒற்றுமைப்பட்டு நிற்கின்ற உயிரறிவு அவற்றால் இன்ப துன்ப நுகர்ந்து அறியாமை நீங்கி விளக்கமுடையதாகின்றது. வெளியே தோன்றும் எல்லாப் பொருட் குணங்களும் இவ்வுடலென்னும் பளிக்குப் பாறையிலே வெளிப்பட்டுத் தோன்றுகின்றனவாகலின், இதன் நடுவில் வாழ்கின்ற உயிரறிவு இவையனைத்தையும் உணர வல்லதாகின்றது. ஆகவே அகத்தே தோன்றும் உயிரின் அறிவொழுக்கங்களெல்லாம், புறத்தே அவற்றை எழுப்புதற்குக் காரணமாயுள்ள பொருட் பாகு பாட்டுடன் பொருந்தியே இருக்கும். இந்நுட்ப மெல்லாம் முற்றவும் அறிந்த ஆசிரியர் அகவொழுக்கத்தைக் கைக்கிளை முதற் பெருந்திணை இறுதியாக எழு கூறாகப் பிரித்தார்; அங்ஙனம் பிரித்ததற்கேற்பவே அவற்றோடு ஒற்றுமையுடைய புறப்பொருளையும் எழு கூறாக்கினார்.

இனி ஓருயிர் பிறிதோர் உயிரோடு பொருந்தும் வழிப் பிறக்கும் இன்பதுன்ப நுகர்ச்சியெல்லாம் ஆசிரியர் ஒருங்கே விளக்கியுரைக்கும் திறம் மிகப் பெரிது. இவர்போல் உயிர் இயற்கை முழுதுணர்ந்து உரைத்த வேறு புலவர் ஆங்கிலமொழி வல்ல செகப்பிரியர் ஒருவரேயாம். அகத்தே தோன்றும் அவ்வின்ப துன்ப நிகழ்ச்சிக் கேற்ற இடம் பொழுது முதலாக ஆசிரியரான் ஆராய்ந்துரைக்கப் பட்டனவெல்லாம் இன்று காறும் உலக இயற்கை பிழையாது வருகின்றன. இங்ஙனம் உலக இயற்கை முழுதுணர்ந் திலக்கண முரைத்த ஆசிரியரை வேறு எத்தேயத்தினும் எந்த மொழியினுங் காண்டல் அரிது அரிது.

இனி, உயிரின் அகத்தே தோன்றும் உணர்வு நிகழ்ச்சிக ளல்லாம் இவ்வுடம்பின் புறத்தே முகத்திற் றோன்றுஎன்பது 'மெய்ப்பாட்டியலில்' வரம்பு செய்துரைக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/60&oldid=1591723" இலிருந்து மீள்விக்கப்பட்டது