பக்கம்:மறைமலையம் 29.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம் லயம் - 29

பகைவரை யடக்குவோய்! மக்களெல்லார்க்கும் நட்பாள!

அப்பரிசையால் அவன்தன் உயர்நிலையையும் இருப்பரணையும் அடைந்தான்.

நீ வீருத்திரனைக் கோறற்குச் சிறப்புடையை யாகுக, இன்பந் தருதற்குத் தலைமையுடையை யாகுக, மிகுந்த வள்ளன்மை யுடையை யாகுக: செல்வமிகுந்த எம் இளவரசர் கொடையை விருத்திசெய்க.

வலிய தேவர்கட்கு ஆற்றும் விருந்திற்கு நினது இரசத் தை ஒழுகச்செய்க: எங்கட்கு வலிவும் புகழும் உண் டாதற்பொருட்டு இங்கே வருக.

ஓ இந்துவே! நாளுநாளும் இவ்வாறே கருத்தோடு நின்னருகே வருகின்றோம்: நினக்கே எம் வேண்டுகோள் மந்திரங்கள் சொல்லப்படுகின்றன.

(2)

(3)

(4)

(5)

சூரியன் புதல்வி என்றும் யாட்டுமயிர்க் கம்பலத்தால்

நின் சோமரசத்தை வடித்துச சுத்தியாக்கி ஒழுகவிடுகின்றாள்.

(6)

மெல்லியரான பதின்மர்தோழிமார் நறுக்கும் இயந்திரத்தில்

அவனைப் பிடித்துவைத்து முடிவுநாள் வரையில் அவனை விடாது

கொண்டிருக்கின்றனர்.

(7)

அக்கன்னிமகளிர் பின் அவனைப் போகவிடுகின்றார்: இசை

கூட்டுவானைப்போல் அவர்கள் துருத்தி ஊதிப்

பகைவரை ஒட்டும் முக்கூட்டுப் பானத்தை

உருகச் செய்கின்றனர்.

(8)

இந்திரன் பருகுதற்பொருட்டு, ஊறுசெய்யப்படாத பால்

ஆக்கள் அவனைச் சுற்றிலுங் கூடியிருந்து புதிய இளஞ் சோமரசத்தில் தமதுபாலைக் கலப்பிக்கின்றன.

(9)

இவ்விரசத்தைப் பருகின பெரு’களிப்பால் இந்திரன் விருத்திரரை எல்லாம் கொல்கின்றான்: அவன் தன்செல்வத் தை நமக்குச் சொரிந்து தருகின்றான்.

(10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/65&oldid=1591728" இலிருந்து மீள்விக்கப்பட்டது