பக்கம்:மறைமலையம் 29.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

41

இப்பெற்றியவாம் பதிகங்களே இருக்குவேதம் முழுவதும் நிரம்பிக் கிடடக்கின்றன. இன்னோரன்ன பதிகங்களிற் காணப் பட்ட வழிபாடுகள் இன்றும் மிக மந்த பக்குவமுடைய மாக்கள் நாடுகளிற் காட்டேரி, இருளன், கறுப்பன் முதலிய சிறு தய்வங்களை வழிபட்டு வரும் முறைகளோடு ஒத்திருக் கின்றனவே யல்லது வேறென்னை? இன்னும் ஆரியர் வேள்விகள் வேட்டதன்றியும்

சோமரசபானத்தான் வெள்ளாடுகள், செம்மறியாடகள், பசுமாடுகள், எருமை மாடுகள், குதிரைகள், மனிதர் முதலிய எண்ணிறந்த உயிர்களைக் கொன்றுவேட்டு அவற்றின் ஊனைப் புசித்து வந்தார்கள். மனிதன் மனிதனைக் கொன்று புசிக்குஞ் செய்கை எவ்வளவு கொடுமையான செயல்! நக்கவாரம் முதலிய தீவகங்களில் வசிக்கும் மிக்க அநாகரிக சாதியாரே இன்றும் மனித ஊன் புசித்து வருகின்றனர். உயிர்களில் மனிதர்க்குப் பலவகையாலும் பயன்படுதலுடை ய பசுமாடு, குதிரை முதலியவற்றைச் சிறிதும் இரக்கமின்றிக் கொன்று அவற்றின் ஊனைவிரும்பி வேண்டியமட்டும் புசித்து வந்தனராயின், பண்டை க் கால ஆரியசாதியார் எவ்வளவு கொடியவர்க ளென்றும் எவ்வளவு அறியாமை யுடையவர்களென்றும் எண்ண வேண்டியிருக்கின்றது! இவ்வளவு கொடுஞ் செயலுஞ் செய்து கொண்டு, இக்கொடுஞ்செயலுக் குதவியாகத் தாம் பாடி வைத்துக் கொண்ட இழிந்த வேதப்பாட்டுக்கைளைத் தம்மின் வேறான தமிழ்மக்களும் ஒருப்பட்டுத் தழுவிச் சிறப்பிக்கும்படி வற்புறுத்து வரும் அவர் செயல் நினையுங்கா லெல்லாஞ் சாலவும் வஞ்சனையுடைத்தென்று தோன்றுகின்றது. இத்தகைய கொடுஞ் செய்கையுஞ் சுவர்க்கத்தைத் தருமென்ற அவரது போலிப் பொய்யுரையை மறுத்தற்கன்றே நம்முது குரவரான தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்,

66

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.”

6

என்று திருவாய் மலர்ந்தருளினார். சாங்கியம் என்னும் அரிய தத்துவநூல் வகுத்தெழுதிய பேரறிவாளரான கபிலரும் கணக்கில்லாப் பிராணிகளைக் கொல்வித்து அவற்றின் இரத்தத்தை ஆறாய்ப் பெருகச் செய்வித்தலின் வேதங்கள் அசுத்தமுடையன.” என்று ஓதினார். அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/66&oldid=1591729" இலிருந்து மீள்விக்கப்பட்டது