பக்கம்:மறைமலையம் 29.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மறைமலையம் - 29

யாதெனின், ராஜந்யர் அல்லது அரசினியார் என்று ஆரியரால் அழைக்கப்பபெற்ற பண்டைக்காலத் தமிழ் நன்மக்களே ஆரியப் பிராமணர்க்குத் தத்துவ ஞானோபதேசஞ் செய்து வந்தன ரென்பதேயாம் என்க. ஆகவே, உபநிடதம் தமிழாசிரியரால் ஆரியமொழியில் எழுதப்பட்டன வென்னுமுண்மை தெளிபொருளாய் நிலைநிறுத்தப் பட்டது. வேதாந்த சூத்திரம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், முதலியனவெல்லாம் வகுத்து நுண்பொருள் பொதுள எழுதினார் தமிழாசிரியரேயா மென்பதூஉம், புத்தசமயம் விளக்கிய கௌதமசாக்கியரும் தமிழாசிரியரேயா மென்பதூஉம் முல்லைப்பாட்டாராய்ச்சி, திருக்குறளாராய்ச்சியில் நன்கு விளக்கிக் காட்டினாம். ஆண்டுக் காண்க. இவ்வாறு தத்துவஞானங்களும் அவை திருந்த விளக்கிய உபநிடதம் சிவாகம முதலியனவும் தமிழர்க்கே உரியனவாய்ப் பின் ஆரியராற் றமிழரிடமிருந்து பெறப்பட்ட ஆரிய இரவற்பொருணூால்களாய் நிலைப்பவும், இஞ்ஞான்றை ஆரியர் அவை தமக்கே உரியனவெனவும், அவை தம்மைத் தமிழர் ஓதப்பெறாரெனவுங் கூறுதல் சிறுமகாரானும் எள்ளி நகையாடற்பாலதாம். இஞ்ஞான்றை ஆரியர் தமிழர் செய்த நன்றியைச் சிறிதும் ஓராது ‘தீட்டின மரத்திற் கூர்பார்த்தல்’ ஒப்பத் தமக்கு அறிவுகொளுத்திய பண்டைத் தமிழ் மக்கள் மரபினராம் நம்மனோர்பாற் செய்துபோதரும் படிற்றொழுக்கம் மிகப்பெரிது! அவர் படிற்றொழுக்க வியல்பு இனைத் தென்றறியாத நம்மனோரும் அவர்மயக்கவுரையில் விழுந்து அவமேயாகின்றார். இனியேனும் தம் பெருஞ்சிறப் புணர்ந்து ஆக்கமெய்துவாராக.

அடிக்குறிப்புகள்

1905 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் செய்த சொற்பொழிவு. Historic Times.

1.

2.

3.

Pre Historic Times.

4.

ம்ம்

5.

6.

4-ஆம் அத். 2, 13

4-ஆம் அத். 1, 126.

4-ஆம் அத். 1, 171.

7. 4-ஆம் அத். 1, 178.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/71&oldid=1591735" இலிருந்து மீள்விக்கப்பட்டது