பக்கம்:மறைமலையம் 29.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

53

அண்மையிலும் உள்ள ஊர்களும் நகர்களும் எரிந்து சாம்பலாய்விடுகின்றன. கி.பி 501 - ஆம் ஆண்டில் வெசுவியசு என்னும் எரிமலையினின்றும் பொங்கி வழிந்த தீக்குழம்பால் அதனை அடுத்திருந்த பெரிய நகரங்கள் எரிந்து சாம்பராயின; பதினெண்ணாயிரம் மக்களும் மடிந்துபோயினர்!

இங்ஙனம், உயிர் வாழ்க்கைக்குப் பேரிடர் பயப்பதான தீவடிவினதாய் முதற்கண் இருந்தமையால், இந்நிலவுலகத்தின் மேற்பரப்பிற் பலகோடி ஆண்டுகள் வரையிற் புற்பூண்டுகள் முதல் மக்கள் ஈறான எத்தகைய உயிருந் தோன்றாவாயின. பிறகு, பன்னூராயிரம் ஆண்டுகளாக இந்நிலவுலகின் வெம்மை ஆறி வரவர, இதன் மேற்பரப்பு இறுக, இறுகிய கற்பாறையின் பள்ளத்தாக்கான இடங்களில் மழைநீர் நிரம்பி, ஏரி, சிறுகடல் பெருங்கடல் முதலான நீர்நிலைகளைத் தோற்றுவிக்கலாயிற்று.

.

அங்ஙனம் உண்டான நீர்நிலைகளின் அடிப்படையில் நீர்ப்பூண்டுகளும், அவற்றின்பிற் பல நூற்றாண்டுகள் கழித்துப், பெருக்கக் கண்ணாடியின் உதவியின்றி நம் கட்புலன்களுக்குச் சிறிதும் புலனாகாத மிக நுண்ணிய உயிர்களுந் தோன்றுவ வாயின. அவற்றின்பிற் பல நூற்றாண்டுகள் கழித்து நங் கட்புலன்களுக்குப் புலனாகும் ஈரறிவுயிர்களும், அவற்றின்பின் மூவறிவு, நாலறிவு ஐயறிவுடைய உயிர்களும், இறுதியாக ஆறறிவுயிர்களாகிய மக்களுந் தோன்றலாயினர். இங்ஙனம் நீரின்கட்டோன்றிய உயிர்களிற் பல நிலத்தின்மேல் இவர்ந்து வந்து உயிர்வாழ்தற்கு ஏற்றபடியாக, நீர் நிலைகளை அடுத்த நிலப்பகுதிகளிற் சிறியவும் பெரியவுமான புற்பூண்டுகளும், மரஞ்செடி கொடிகளும் உண்டாகி இலையும் பூவங், காயுங் கனியுங், கிழங்குகளும் வித்துக்களும் ஆகிய உணவுப் பொருள்களை மிகுதியாக அளித்தன. உணவுப் பொருள்கள் மிகுந்து வரவே, அவற்றை அயிலும் உயிர்களும் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரமாய்ப் பல்கலாயின.

ாகிப்,

இவ்வாறாக, நிலத்தின் மேற்பரப்பில் நீர்த்தோற்ம், கற்பொடித்தோற்றம், புற்பூண்டுத்தோற்றம், சிற்றுயிர்த்தோற்றம் முதலான நிகழ்ச்சிகளெல்லாம் படிப்படியே யுண்ட பலகோடி ஆண்டுகள் சென்ற பின்னரேதான் மக்களுயிர்களின் தோற்றம் உளதாயிற்று. விலங்கின் யாக்கையில் நின்ற உயிர் பலகோடி யாண்டுகளாக அவ்வியாக்கைகளை விட்டுவிட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/78&oldid=1591742" இலிருந்து மீள்விக்கப்பட்டது