பக்கம்:மறைமலையம் 29.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்

சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள் கோத்திரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்,

பாத்திரஞ் சிவமென்று பணிதிரேல்

மாத்திரைக்குள் ளருளும் மாற்பேறரே.

இயல் - 1

திருநாவுக்கரசு சுவாமிகள்

பழைய வேதத்தில் சாதி இல்லை

சைவசமயமானது அருள் ஒழுக்கத்தையும், சிவபிரான் மாட்டும் அவன் அடியார் மாட்டும் ஏனையெல்லா உயிர்கள் மாட்டும் அன்புபூண்டொழுகும் ஒழுக்கத்தையும் அறிவுறுத் துவதென்று உணரும் நல்வினை இல்லாத போலிச் சைவர் சிலர் சாதிவேற்றுமையே தாம் சைவசமயத்தாற் 6 பெறும் மெய்யுணர்வாகும் என்று மயங்கி உணர்ந்து, அம் மயக்க வுணர்ச்சியைத் தம்மிடத்தும் தம்மோ டொத்தவரிடத்தும் வைத்து மகிழ்வதோடு அமைதிபெறாமல், அதனைத் தமக்கு இசைந்த பத்திரிகைகளினும் எழுதி வெளியிடுவித்துச், சைவ வுண்மைகளை உள்ளவாறே எடுத்து விளக்கிவரும் வொழுக்கமுடைய பெரியாரையும் தமக்குள்ள பொறாமை யாலும் இழிந்ததன்மையாலும் தமக்குத் தோன்றியவா றெல்லாம் இகழ்ந்து பேசுதலுஞ் செய்கின்றார். ஒருவருடைய உயர்வுந் தாழ்வும் அறிவான் மிக்க சான்றோர் மதிக்கற் பாலரே யல்லாமல், அறிவில்லாக் குறும்பர் மதிக்கற்பால ரல்லர்; ஆகவே, அறிவில்லார் கூறும் இகழுரைகளையும் பொய்ம் மொழிகளையும் அறிவுடையார் ஒரு பொருட்டாக

தவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/92&oldid=1591756" இலிருந்து மீள்விக்கப்பட்டது