பக்கம்:மறைமலையம் 29.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் - 29

எண்ணாராகலின் அவர் கூறும் பழிச்சொற்களை விடுத்து, அவர் கூறும் மற்றப் பகுதிகளில் உள்ள குற்றங்களை மட்டும் ஒரு சிறிது எடுத்துக்காட்டி மறுத்தல் அவர் கூறியவற்றைக் கண்டு ஆராய்ச்சி யுணர்வில்லாதார் மயங்காமைப் பொருட்டேயாம்.

சாதிவேற்றுமை

பழையகாலந்தொட்டே

வேதம்

முதலான நூல்களிற் காணப்படுகின்றதாகலின், அந்நூல்களை ஒப்புக்கொண்டவர்கள் அவ்வேற்றுமையினைக் கைப்பற்றி யொழுகுதலே செயற்பால ரென்பது ஒருசாரார் கொள்கை.

சாதிவேற்றுமை பழமையாக உள்ளதென்றே கொண் ாலும், அதனைத் தழுவியொழுகல் வேண்டு மென்பது பகுத்தறிவில்லார் கூற்றாம். பழையனவெல்லாம் நல்லன வாதலும் இல்லை புதியனவெல்லாம் தீயனவாதலும் இல்லை; பழையனவற்றில் தீயனவும் உண்டு புதியனவற்றில் நல்லனவும் உண்டு. இவ்வுண்மையைச் சைவசித்தாந்த ஆசிரியருள் ஒருவரான உமாபதி சிவாசாரிய அடிகள் “தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா” என்று அறிவுறுத்தருளினமையுங் காண்க.

மைகளிலாவது

இஞ் ஞான்றுள்ள பல்வகை மக்கட்பிரிவினரும் தத்தமக்குப் பண்டுதொட்டே உரிய கட பிறழாமல் வாழ்கின்றனரோ வென்றால் அதுவுமில்லை. பார்ப்பனரிற் பெரும்பாலார் தமக்கு உரிய நூல் ஓதுதல், வேள்விவேட்டல், பிறர்கொடுக்கும் பொருளை யேற்று வயிறுவளர்த்தல் முதலான தொழில்களை அறவே கைவிட்டு ஆங்கில நூல்களைக் கற்றுத், தம்மால் மிலேச்சராகக் கருதப்பட்ட வெள்ளைக்காரரின் கீழ் அலுவல்களில் அமர்ந்து, அவர்கள் ஏவிய பற்பல தொழில்களையும் செய்துவருகிறார்கள் அல்லரோ? ங்ஙனமாகத் தமக்குரிய தொழில்களைக் கைவிட்டு, அரசரின்கீழ் அலுவல் பார்ப்போர் பார்ப்பனர் ஆகமாட்டார் என்று மனுமிருதி (3, 4) வற்புறுத்திக் கூறியும், அரசரின்கீழ் ஊழியம் செய்வதே இப்போது அவர்கட்கு இயற்கையாய் விட்டதன்றோ? கடல்கடந்து வேற்றுநாடு களுக்குப் போதல் பார்ப்பனர் களுக்கு விலக்கப்பட்டிருந்தும் (மனு, 3,158), அவர்களிற் பலர் கடல்கடந்து சென்று ஆங்கிலங் கற்றும், பொருள் தேடியுந் திரும்பிவந்து தம்மினத்தவரோடு உறவுகலந்து பார்ப்பனரிற் சிறந்தோராகக் கருதப்படுதலை நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/93&oldid=1591757" இலிருந்து மீள்விக்கப்பட்டது