பக்கம்:மறைமலையம் 29.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் - 29

வல்லன் எனின்; அங்ஙனம் எல்லாம் வல்ல இறைவன் மக்களைத் தோற்றுவித்தற்கு அவனது நினைவொன்றே போதுமாயிருக்க, வாய் தோள் தொடை அடி முதலிய உறுப்புக்களும் அதற்கு வேண்டுமோ எனக் கூறிமறுக்க. மேலும்,

தன்னுறுப்புக்களினின்று

இறைவன்

மக்களைப் படைத்ததனை அம்மக்களுள் ஒருபாலாராகிய கற்றவர் கண்டறிவதெங்ஙனம்? எவரும் தாய்வயிற்றினின்று பிறக்கின்ற ஞான்று தாம் அங்ஙனம் பிறத்தலை அறிந்த வரல்லர். தாம் பிறந்து வளர்ந்து அறிவுடைய ரானபின், குழவிகள் தாய்வயிற்றினின்றும் பிறத்தலைப் பலகாலுங் கண்டுவைத்தே தாமும் அங்ஙனம் பிறந்திருத்தல் வேண்டுமென எல்லாரும் உய்த்துணர்கின்றார். இம்முறை யோடு ஒப்ப, முழுமுதற் கடவுளும் இப்போது எவ்விடத்தாயினும் தம்முடைய வாய் தோள் தொடை அடி முதலான உறுப்புகளிலிருந்து பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்பாரைத் தோற்றுவிக்க நாம் காணினன்றோ, முதன்முதல் அவர் அந் நாற்பிரிவினரையும் படைத்த காலத்தில் அவர்களை அங்ஙனமே தோற்றுவித்திருப்பாரென உணரலாம். அவ்வாறு கடவுள் தம்முடைய நால்வேறு உறுப்புக் களினின்று நால்வேறு வகுப்பினரைத் தோற்றுவித்தல் எங்கும் நிகழக்காணாமை யானும், இயங்கும் உயிர்கள் அத்தனையும் தாய்தந்தையரின் சேர்க்கையாற் றாயின் கருப்பையினின்றே தோன்றக் காண்டலானும், இவ்வாறு நடைபெறும் உயிர்களின் பிறப்பு உலகம் உண்டான காலமுதற் பிறழாமல் நிகழ்ந்துவருதல் முன்னுள்ள உண்மையறிவினர் தொன்றுதொட்டு வரன் முறையாக எழுதிவைத்திருக்கும் உண்மை நூல்களால் அறியக் கிடத்தலானும், தாய்தந்தையரின் சேர்க்கையினால் தாயின் கருப்பையினின்றே பார்ப்பனர் அரசர் வணிகர் அடியோர் என்னும் எல்லாமக்களும் பிறத்தலைக் கண்கூடாக யாவருங் கண்டுவருதலானும், இம்முறையையே தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்று இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னரே அருளிச் செய்திருத்தலானும், இங்ஙனம் பிறவியெடுக்கும் அமைப்புக் கடவுள் வகுத்ததேயல்லாமற் பிறரெவரும் வகுத்த தல்லாமையானும், தான் வகுத்த இவ்வமைப்புக்கு மாறாக இறைவன் வேறொருவாற்றால் மக்களைத் தோற்றுவித்தா னென்றால் பிறழா இயற்கையனாகிய அவனது இறைமைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/99&oldid=1591763" இலிருந்து மீள்விக்கப்பட்டது