பக்கம்:மறைமலையம் 3.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86



13. தீது செய்தவர்க்குத் தண்டனை

மிக நல்லவராய் இருப்பவர் ஒருவருக்கு ஒருவன் இடை விடாது தீதுசெய்து வருகுவனானாலும், அவர் அதனை ஒரு பொருட்டாய் எண்ணாமலும், அதுபற்றி மனத்துள் வைரங் கொள்ளாமலும், வைரம் இல்லாமையால் அவனைத் தண்டிக்க விரும்பாமலும் போவராதலால் அவர் தூலசரீரத்தை விட்டுச் சூக்குமசரீரத்திற் போன பின்னும் அவனுக்கு எவ்வாற்றாலும் தீங்கு செய்ய முன்வரார். இதற்குப் பெரிய புராணத்திற் சொல்லப்பட்ட மெய்ப்பொருளார் என்னும் அரசர் பெருமானின் சரித்திரமே தக்க சான்றாம். தமக்குக் கொடும் பகைவன் என்பது தெரிந்தும், அப்பகைவன் துறவிவேடந்தரித்து வந்தமை கண்டு அவனை அவ்வரசர் பெரிதும் உபசரித்துப் பீடத்தின்மேல் இருக்க வைத்தார். பிறகு அவன் அவ்வரசரைத் தன்னோடு தனித்திருக்கும்படி கேட்க, அதற்கு அவர் அவ்வாறே இசைந்து தம் அருமை மனைவியாரை அப்புறத்தே அனுப்பிவிட்டார். உடனே அரசர் தனிமையிலிருப்பது கண்ட பாதகன் தன் கக்கத்தில் மறைத்து வைத்திருந்த குற்றுடைவாளினை உருவி அவ்வரசரின் அருமைத் திருமார்பிலே பாய்ச்சினான்; அவ்வாறு அக்கொடியன் பாய்ச்சியபோதும் அவ்வரசர் ஏதும் சினந்து அதனைத் தடாமல் அதனை ஏற்றுக் கொண்டார்; இவன் வாளிற்குத்திய அரவங் கேட்டுப் புறத்தேயிருந்த தத்தன் என்னுங் காவற்காரன் உள்ளோடி வந்து அக்கொடியவனைப் பிடித்துக்கொள்ள, உயிர் துறக்கும் நிலைமையில் அவ்வரசர் “தத்தா, இவர் நம்மவர். இவர்க்கு ஏதுந் தீங்கு வராமே இவரைப் புறங்கொண்டுபோய் விடுக” என்று சொல்லி உயிர் நீத்தருளினார். இதனால், மெய்ப்பொருளார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/119&oldid=1623802" இலிருந்து மீள்விக்கப்பட்டது