பக்கம்:மறைமலையம் 3.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93



15. ஒளியாகாயத்தின் இயல்பு

இஞ்ஞான்று அமெரிக்கா தேசத்தில் அகக்கண் திறக்கப்பட்ட அறிவோர் சிலர் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து ஒளியாகாயத்தில் பொறிக்கப்பட்டுக் கிடக்கும் நிகழ்ச்சிகளைப் புத்தகம் விரித்துப் படிப்பதுபோற் படித்தறிந்து நூல்கள் எழுதுகின்றனர். இதற்கு ஓர் உதாரணம் வருமாறு : இப்போது அமெரிக்காவில் அகக்கண் திறக்கப்பட்டு விளங்கும் அறிவோரான இலெவி என்பவர் இற்றைக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் நிலவின இயேசுக் கிறித்து என்னும் பெரியார் இவ் இந்தியதேயத்தில் வந்து பல்லாண்டிருந்து அருந்தவத்தோர் பலருடன் பழகி அவர் பால் இரகசிய உண்மை உபதேசங்கள் பெற்றுச் சென்ற வரலாறு களெல்லாம் ஒளியாகாயத்தில் நன்கு பொறிக்கப் பட்டிருத்தலை இனிதறிந்து ஓர் அரிய பெரிய நூல்*(The Aquarian Gospel of Jesus the Chrit, Recovered from Akasic records by Levi) எழுதி வெளியிடுவித்திருக்கின்றார்; அந்நூலின் அருமைகளையும் அதில் எழுதப்பட்ட வரலாறுகளின் உண்மைகளையும் அந் நூலைத் தமது தெளிவுக்காட்சியினுதவிக் கொண்டு ஒளியாகா யத்தினின்றும் பெயர்த்தெழுதின ஆக்கியோன் பெருமைகளையும் இனிது விளக்கி, அவ்வமெரிக்கா தேயத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் மாட்சிமை தங்கிய எச்.ஏ. காபீன் என்பவரால் அந் நூலுக்கு ஒரு முகவுரையும் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதுவரையிலும் வேறெந்த வகையாலும் அறியப்படாமலிருந்த அரிய பெரிய இரகசியங்களும் உண்மைகளும் இந்நூலின்கண் இப்போதுதான் வெளிப்பட்டிருக்கின்றன. இவற்றைக் கல்வி கேள்விகளின் மிக்க அறிவுடையோர் பலரும் சிறிதும் ஐயம் உறாமல் உண்மையென்றே கைக்கொண்டு பாராட்டி வருகின்றார்கள். இவ்வாற்றால் மிகவுஞ் சூக்குமமான ஒளியா காயம் ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/126&oldid=1623814" இலிருந்து மீள்விக்கப்பட்டது