பக்கம்:மறைமலையம் 3.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
103

வீட்டையே முற்றிலும் விட்டுப்போக விரும்புமாறு செய்து விட்டீரே. உண்மையில் இவ்விடம் பேய் பிடித்ததெனப் பெயர் பெற்றுவிட்டது; இங்குள்ள குடிகள் இதனை விட்டுப் போய் விடுவார்களாயின் இது வெறுமை யாகவே இருக்கும்படி நேரக்கூடுமே’ என்றார். அதற்கு அவ்வாவி, ‘யான் இவர்களுக்குச் செய்தியறிவிக்கக் கூடியவனானது பற்றி மகிழ்ச்சி அடைகின்றேன்; இவ் வீட்டுக்கார அம்மை ஆவேசங்களோடு இயைவு படுதற்குரிய சூக்கும இயல்பு வாய்ந்தவரென்றும், அவருடைய நாற்காலிகளையும் மேசைகளையும் கிலுகிலுக்கப் பண்ணின சூக்கும பிராண சக்தியினை அவ் வம்மையினிடத்திலிருந்தே யான் இழுத்துக் கொண்டேனென்றும் நீர் அவ் வம்மைக்குத் தெரிவித்தல் வேண்டும்,’ என்றது. ஆவேச வடிவில் நின்ற அவன் தன் பெயரையும் தன் மகளின் விலாசத்தையும் தெரிவித்தான்.இது நடந்த மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு, எங்கள் மந்திரக் கூட்டத்திலிருந்த ஒருவர் என்னிடம் வந்து, ‘முற்சென்ற இரவில் நமக்குத் தெரிவிக்கப்பட்டது உண்மையெனக் கண்டுபிடித்தேன். ஓர் அம்மையோடு யான் பேச நேரிட்டதில், அந்த அம்மை ஆவிவடிவிற் றோன்றிய அவ் வாடவனைத் தான் அறிவள் என்றும், அவன் இவ் வீட்டில் தங்கியிருந்தது உண்மையே யென்றும் உரைத்தாள்,’ எனக் கூறினர். சில மாதங்கள் கழிந்த பிறகு, அவ்வாவேச வடிவில் நின்றவன் மகளிடமிருந்து கடிதம் வந்தது; அதில் அவள் தன் றந்தை எங்கிருந்தாரென்பதும், அவர் உயிரோடிருந்தனரோ இறந்துபோயினரோ என்பதும் தான் அறிந்திலள் எனத் தெரிவித்தாள்; ஏனென்றால், பல ஆண்டுகளாக அவனைப் பற்றி அவள் கேள்விப்படவே இல்லை முற்சென்ற நிகழ்ச்சியில் மிகவும் விநோதமானது இது: பேய்பிடித்த வீடு என்பதைப்பற்றி அவ் வீட்டுக்காரன், குடித்தனக்காரர் வீட்டைவிட்டுப் போகாமைப் பொருட்டு வாடகையைக் குறைத்திருந்தான். தன்னை வந்து காணும் ஆவி தன்னை விட்டு நீங்கினதனால் உவகையுற்ற அம் மாது, பேய்க்கூச்சல் நின்றுபோன வகையை வீட்டுக்காரனுக்கு எடுத்துச் சால்லவே, அவன் வீட்டு வாட கையை உடனே உயர்த்தி விட்டான்!

“இந்த அனுபவமானது, பேய்பிடித்த வீடுகள் என்பன மனவலியில்லாத ஆடவர்களும் ஆண்டின் முதிர்ந்த கிழவிகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/136&oldid=1623828" இலிருந்து மீள்விக்கப்பட்டது