பக்கம்:மறைமலையம் 3.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114



17. சூக்கும ஒளியுலக வாழ்க்கை

வேறொருவர் உடம்பை இரவலாகப் பற்றிக் கொண்டு புதுமாதிரியாக இன்று நான் இருவகை யுலகங்களின் வாழ்த்துரைகளோடும் வந்திருக்கிறேன். எனது உயிர் வாழ்க்கையில் யான் அடைந்த பெருவெற்றியின் - மரணத்தைச் செயித்ததன் - வரலாற்றினை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வல்லவனா யிருக்கின்றேன்.

எனது உடம்பு தனியே விட்டு விடப்பட்டது; ஆனால் எனதுயிரோ உங்கள் நடுவில் நான் இருந்த காலத்து இருந்தது போலவே திரும்பவும் புதிதான சுறுசுறுப்போடும் எல்லாச் சக்திகளோடும் முழுமையாகவே இருக்கின்றது. இப்போதுயான் புதிதாகக் கண்ட இந்நிலையில் உண்டான மனக்கிளர்ச்சியினாலும் ஊக்கத்தினாலுமே நிறைந்திருக்கின்றேன். இறப்பு என்று சொல்லப்படும் நிலைமாறுதலின் வழியாக யான் ஒருசிறிதும் துன்பம் உழவாமலே நிலவாழ்க்கையைக் கடந்துவந்தேன். என்னுடம்பு மெலிந்துபோனது உண்மைதான்; சென்ற சில ஆண்டுகளாக வலிவின்மையினாலும் தளர்ச்சியினாலும் யான் வருந்திக் கொண்டிருந்ததும் உண்மைதான்; என்றாலும், ஒரு தொடர்பான உபதேசங்களைக் கேட்டதனாலும், சூக்கும சரீரத்திலுள்ள என் நண்பர்களோடு அடிக்கடி கலந்துறவாடினதனாலும் சாக்காடென்பது அஞ்சத்தக்க தன்று என நான் அறிந்துகொண்டேன். எனது நிலவாழ்க்கையின் கடைசி நாட்களில், நிலவுலகத்தைத் துறந்து செல்வதற்குச் சில வாரங்களுக்கு முன்னிருந்தே ஓர் அன்புள்ள ஆவி என்னுடனிருந்து கொண்டு எனக்கு உதவி செய்வதை உணரலானேன். இந்த ஆவி, எனது நிலவாழ்க்கையின் இளம்பருவத்தில் எனக்கு நண்பராயிருந்தவரேதாம்; இந் நண்பர் இறந்ததனால் எனக்குண்டான துயரமே இறந்தவர்களின் ஆவி எந்த மண்டிலத்திற்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/147&oldid=1623850" இலிருந்து மீள்விக்கப்பட்டது