பக்கம்:மறைமலையம் 3.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
116

❖ மறைமலையம் - 3 ❖

அருவருப்பு மாத்திரம் - அன்பாக நேசிக்கப்பட்ட நண்பரின் உடம்பைச் சார்ந்திருக்க வேண்டு மென்னும் மிகு விருப்பம் மாத்திரம், இன்னும் அவர்களிடத்தில் மறைவா யிருந்த தென்பது உண்மை.

உறக்கமாவது குறைந்த உணர்ச்சியாவது இடை நிகழக் கண்டேனில்லை; பல ஆண்டுகளாகச் சங்கிலியிற் கட்டுண்டு கிடந்தவன் அக் கட்டு அறுந்ததுங் குதித்து எழுமாறு போலப் புதிது காணப்பட்ட எனதுயிர் வாழ்க்கையில் யானும் மனக்கிளர்ச்சியோடு சென்றேன். எனது உயிர் வாழ்நாளின் பிற்பகுதியில் உண்டான நோய் வருத்தத்தால் யான் விலங்கிடப் பட்டவனைப் போல் இருந்தேன். தாங்குவதற்குக் கூடாத தளர்ச்சி உண்டானமை யினாலே, இவ் வூனுடம்பாகிய சங்கிலியாற் பிணிக்கப்பட்டுக் கிடந்தே னெனவே எண்ணினேன். சிறையில் அடைக்கப்பட்டிருந்து வெளிப்பட்ட ஒருவன் இனிய காற்றில் வந்து அமிழ்ந்துவது போலவும், பொன் மயமான கடலிற் பாய்வது போலவும் யானும் அங்குக் களிப்பாற் றுள்ளினேன். எனக்குச் சொந்தமாயிருந்த இளமையும் வலிமையும் ஆண்மையும் ஆகிய எல்லாம் திரும்பவும் என்னிடம் வரக் கண்டேன். என்னைப் பற்றின மட்டில் இதனினும் இன்னும் மேலான சிலவற்றை உணரலானேன்: சூக்குமதத்துவ உயிர் வாழ்க்கையில் யான் மிகுந்த அனுபவ முடையவனாயிருந்தும், ஆவி வடிவில் நிற்போர் பலரை யான் என்னிடம் வரக் கண்டும் அவர்களோடு யான் கலந்துறவாடியும், என்னை நிலவுலகத்தோடு பிணித்துவைத்த கட்டுக் கடைசியாக அறுபட்ட பின்னர் அல்லாமல் சூக்கும வாழ்வின் இயல்பை இதற்கு முன் உண்மையாக உணர்ந்தேனில்லை. எனதுருவ மானது இளமையும் வலிவும் உடைய உருவமாக முற்றும் புதுக்கப் பட்டதனைக் கண்டு அளவிறந்த வியப்படைந்தேன். இதற்குமுன் எனக்கு அறிமுகமா யிருந்தவர்களையும் எனக்குத் தெரிந்த நண்பர்களையும் யான் கண்டு, அவர்கள் ஒவ்வொருவரும் இளைஞராயும், தமக்குப் பிற்பாடு சேர்ந்த சூக்கும வாழ்க்கையின் அனுபவத்தால் அறிஞராயும் விளங்குதலைத் தெரிந்தேன். அப்போது தான் முதன்முதல் குரலொலியும் அல்லாமல், வேறோர் ஓசையும் அல்லாமல், ஒரு சொல்லும் அல்லாமல் உயிர்க் கலப்பாய் மாத்திரம் உள்ள ஆவி யொலியின் த உணர்வாற்றலைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/149&oldid=1623856" இலிருந்து மீள்விக்கப்பட்டது