பக்கம்:மறைமலையம் 3.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
124

❖ மறைமலையம் - 3 ❖

அவர் மறுமொழி புகன்றார். சூக்கும உலக வாழ்க்கையைப் பற்றி அவர் தமக்குச் சிறிதுந் தெரியா தென்பதனை யான் எந்நேரமும் அவருக்குச் சொல்லி வந்தேன்; நாங்கள் எல்லாரும் ஒருங்கு சேர்ந்து சூக்கும தத்துவ ஆராய்ச்சிக் கூட்டம் இட்டு உட்கார்ந்த காலங்களிலெல்லாம், அவர் அரசாங்க காரியங்களைச் சீர்திருத்தஞ்செய்யும் முயற்சியில் தமது கருத்தைச் செலுத்துவார்; யானோ ஆன்மதத்துவ ஆராய்ச்சியிற் கருத்தாயிருந்தேன். அவர் அங்ஙனம் விட்டுச் சொல்லியதைக் கேட்டு மகிழ்ந்தேன்; அஃது எனக்கு ஆறுதலை உண்டுபண்ணி வலியைத் தந்தது. ஆன்மதத்துவ ஆராய்ச்சியில் எனக்குதவி யாயிருந்தவரும் எனக்குச் சிறந்த பழைய நண்பரும் ஆன மேப்ஸ் பண்டிதரை யான் பின்னர் எதிர்ப்பட்டேன். உடனே அவர் என்னை நோக்கி, ‘ஆ! நான் நிலவுலகத்திலிருந்தபோது சடப் பொருளின் வேறாகச் சித்துப் பொருளுக்குள்ள ஆற்றல்களைப் பற்றி எனக்குச் சிறிதுந் தெரியாது; ஆனால் இப்போதோ நீர் கண்ட காட்சிகளெல்லாம் பெரிதும் உண்மையென்றே காண்கின்றேன்,’ என்று மொழிந்தார். என்னை வரவேற்று வாழ்த்தும் பொருட்டு இவ்வொளி யுலகத்தில் ஒருவர் பின் ஒருவராய் வந்தவர் களையெல்லாம் யான் யான் உங்களுக்கு வரிசையாய்ச்சொல்ல வேண்டுவதில்லை. வரவேற்கப்பட்ட உயிர்களை வாழ்த்த வேண்டுமென்று அவ் ஆவிகள் தமக்குள் கூடிப் பேசிக் கொண்டார்களென்று தோன்றியது; என்றாலும், அவர்கள் ஒன்று கூடியது அதன் பொருட்டாகவே அன்று. அவர்கள் அங்கே தமது வழக்கப்படி குழுமியது உயிர்களின் இருப்பைப் பற்றிய வரலாறுகளை ஆராய்ந்து பேசுதற் பாருட்டேதான். அவர்கள் கும்பு கும்பாய் ஒழுங்காகக் கூடியிருந்ததுபோற் காணப்பட்டனர்; ஒவ்வொரு கும்பின் நடுவிலும் தலைவர் ஒருவர் இருந்தார். ஒன்றன் நடுவில் பிராங்க்லின் என்பவரைக் கண்டேன்; அவர் தம்மைச் சூழ இருந்தோர்க்கு இப்போது மண்ணுலகத்தில் உண்டாகும் தோற்றங்களைப்பற்றிச் சில சூக்கும பரிசோதனை செய்யும்படி அவர்களுக்கு எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தார். பூதபௌதிக நூலாராய்ச்சியிலுள்ள எல்லா விஷயங்களிலும் அவர் தலைமைவாய்ந்த பேரறிவினர். அவர் சூக்கும் உலக வாழ்க்கையிற் புகுந்தது முதல் மின்சார விளக்கங்களையும் அதுபோன்ற சக்திகளையும் பற்றிய ஆராய்ச்சியே அவருக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/157&oldid=1624379" இலிருந்து மீள்விக்கப்பட்டது